»   »  ரஜினியை மிரட்டுவதா? இயக்குநர் வீ சேகர் கண்டனம்!

ரஜினியை மிரட்டுவதா? இயக்குநர் வீ சேகர் கண்டனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்ன கதை என்பதே தெரியாமல் காதில் விழுந்த தகவலை வைத்துக் கொண்டு ரஜினிக்கு மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது என்று இயக்குநர் வீ சேகர் கூறியுள்ளார்.

வி.சேகரின் தனது 18 வது படமாக 'சரவணப் பொய்கை'யை இயக்கியுள்ளார். அவருடைய மகன் காரல் மார்க்ஸ் கதாநாயகனாகவும் அருந்ததி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். விவேக் மற்றும் கருணாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Director V Shekar condemn threatening letter to Rajini

வி.சேகரின் திருவள்ளூர் கலைக்கூடம் சார்பில் இப்படம் தயாரித்துள்ளது.

'சரவணப் பொய்கை' படத்தை பிரபலப்படுத்தும் விதமாக நேற்று இப்படத்தின் பாடல் மற்றும் ஸ்டிக்கர்களை நெல்லை சந்திப்பில் உள்ள பேரின்பவிலாஸ் தியேட்டர் தொழிலாளர்கள் மத்தியில் வெளியிட்டனர்.

பின்னர் வி.சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் பெரும்பாலும் குடும்பப் பாங்கான படங்களை எடுத்துள்ளேன். ஏற்கனவே 17 படங்களை இயக்கிவிட்டேன். என்னுடைய பெரும்பான்மை ரசிகர்கள் பெண்கள்தான். ஆனால் தற்போது அவர்கள் டி.வி. சீரியல்களில் மூழ்கி கிடக்கின்றனர். தியேட்டருக்கு கல்லூரி மாணவ, மாணவிகளும், தொழிலாளிகளும் மட்டுமே வந்து படம் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது 18-வது படமாக 'சரவணப் பொய்கை'யை இயக்கிள்ளேன். தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இந்த படத்தில் காதல் கதையை கூறி உள்ளேன். என்னுடைய மகன் காரல் மார்க்ஸ் சினிமா தியேட்டரில் வேலை செய்யும் தொழிலாளியாக நடித்துள்ளார். சினிமாவின் 'டிரண்ட்' மாறும்போது இயக்குநர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நடிகர் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. படத்தின் கதை என்னஎன்பதே தெரியாமல் காதில் விழுந்த தகவலை வைத்துக் கொண்டு ரஜினிக்கு மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது," என்றார்.

English summary
Director V Shekar condemned threatening letter to Rajini from Mumbai Haji Masthan son.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil