இயக்குநர் வி. சேகர் கவலைக்கிடம்.. சோகத்தில் மகன் போட்ட போஸ்ட்!

சென்னை: தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான படங்களை நகைச்சுவையாக சொல்ல முடியும், அது வெற்றி பெறும் என்ற டெம்ப்ளேட்டை உருவாக்கியவர் இயக்குநர் வி. சேகர். இவரது பல படங்கள் எவர் கீரீன் படங்கள் தான். உதாரணத்திற்கு விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா, பொண்டாட்டி சொன்னா கேட்கணும் போன்றவற்றைக் கூறலாம்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான்களான வடிவேலு மற்றும் விவேக்கை இணைந்து நடிக்க வைத்து அவர்களுக்கு என்று ஒரு பாடலை உருவாக்கி அதை ஹிட் ஆக்கியவர் இவர்தான். இப்படியான இயக்குநர் வி. சேகர் சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

Director V Shekar Hospitalized his Health Condition In Very Poor Son Sad Post
மருத்துவமனையில் அனுமதி: அதாவது, நான்கு நாட்களுக்கு முன்னர் இயக்குநர் வி. சேகர் இருதயக் கோளாறால் சென்னை போரூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே செல்வதாக அவரது மகன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உடல்நிலை: அதாவது இயக்குநர் வி. சேகரின் மகன் காரல் மார்க்ஸ் சேகர் தனது எக்ஸ் பக்கத்தில், " தமிழ் மக்களே... என் தந்தையும் மக்கள் இயக்குனருமான வி.சேகர் தற்போது தன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவர் விரைவில் உடல் நலம் பெற அன்பின் ஒளியாக ஒரு தீபம் ஏற்றி இறைவனை மனமார வேண்டிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X