Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 02 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் வேலையில் தலையிடாமல் இருப்பது நல்லது...
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
படத்தின் ரிசல்ட் நம்ம கையில் இல்லை.. கோபத்துடன் பதிலடி கொடுத்த வாரிசு பட இயக்குநர்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கடந்த 11ம் தேதி ரிலீசாகியுள்ளது வாரிசு படம். அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு வெளியானது.
பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சீரியல் போல உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆயினும் படம் கடந்த ஒரு வாரத்தில் 210 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது. இந்த விஷயமும் தற்போது விமர்சனங்களை கிளப்பியுள்ளன.
விஜய் தான் சூப்பர் ஸ்டாரா...? நாட்டுல வேற பிரச்சினையே இல்லையா...? கடுப்பான சரத்குமார்

நடிகர் விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் வாரிசு. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்ட இந்தப் படத்தில் நடித்துள்ளார். பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கலவையான விமர்சனங்கள்
பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள போதிலும் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடியும் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. அதிகப்படியான நட்சத்திர பட்டாளங்கள் மற்றும் அதிகப்படியான படத்தின் நீளம் போன்றவையும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சீரியல் போல இருப்பதாக விமர்சனம்
படம் சீரியல் போன்று இருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் படம் கடந்த ஒரே வாரத்தில் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

வம்சி பைடிப்பள்ளி கோபம்
இதனிடையே வாரிசு படம் சீரியல் போன்று இருப்பதாக கூறப்படும் விமர்சனங்களுக்கு படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளார். தற்காலத்தில் படம் இயக்குவது ஒன்றும் ஜோக் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அதற்காக அதிகப்படியான தியாகங்களை செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரிசல்ட் நமது கைகளில் இல்லை
தற்போதும் நடிகர் விஜய் ஒவ்வொரு பாடலுக்கும் ரிகர்சல் செய்வதாகவும் ஒவ்வொரு டயலாக்கிற்கும் மெனக்கெடுவதாகவும் தெரிவித்துள்ள வம்சி பைடிப்பள்ளி, ஒவ்வொரு படத்திற்கும் உழைப்பை மட்டுமே நாம் கொடுக்க முடியும் என்றும் படத்தின் ரிசல்ட் நம்முடைய கைகளில் இல்லை என்றும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

சீரியல்களை குறைத்து மதிப்பிடாதீங்க
மேலும் சீரியல்களை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும் என்றும் மாலை நேரங்களில் வீட்டில் உள்ளவர்களை சிறப்பாக என்கேஜ் செய்து வருவதாகவும் அதை எடுப்பதற்கும் கிரியேட்டிவிட்டி தேவைப்படுவதாகவும் வம்சி தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய விமர்சனங்களை தான் மனதில் எடுத்துக் கொண்டால், தன்னுடைய வேலைக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.