twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையாய் மூச்சுத் திணறி.. இயக்குனர் வசந்தபாலன் 'ஜெயில்' போஸ்ட்!

    By
    |

    சென்னை: ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம், ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக் கீற்று தெரிகிறது என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    தலைகீழாக விழுந்த Victor Arun Vijay terrific workout | Mafia, Yennai Arindhal, Sinam

    தமிழில், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உட்பட சில படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.

    இப்போது ஜெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோ. ராதிகா, அபர்ணதி, ரோனித் ராய், சுதன்ஷூ பாண்டே, யோகிபாபு, ரோபோ சங்கர், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளார்.

    ராமாயணம், மகாபாரதம், சக்திமானை தொடர்ந்து.. அடுத்த ஒரு சூப்பர் ஹிட் தொடரை கையில் எடுத்த தூர்தர்ஷன்!ராமாயணம், மகாபாரதம், சக்திமானை தொடர்ந்து.. அடுத்த ஒரு சூப்பர் ஹிட் தொடரை கையில் எடுத்த தூர்தர்ஷன்!

    எஸ்.ராமகிருஷ்ணன்

    எஸ்.ராமகிருஷ்ணன்

    கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிகிஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஶ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர், பொன். பார்த்திபன் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வருடமே முடிந்துவிட்டது.

    படத்தை ரிலீஸ்

    படத்தை ரிலீஸ்

    இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த வருடமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய இந்த படம் சில சிக்கல்களால் தள்ளிக் கொண்டே போவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன், 'எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது' என்று பேஸ்புக்கில், சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார்.

    திறக்கும் தாழ்

    திறக்கும் தாழ்

    இந்நிலையில், 'ஜெயில்' படம் பற்றி நல்ல செய்தி வர இருப்பதாக பேஸ்புக்கில் அவர், கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: 'ஜெயில்' என்று பெயர் சூட்டியதால் என்னவோ, ஜெயில் வெளிவர இயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது. எட்டுத் திசையெங்கும் தட்டினோம். குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை.

    வெளிச்சக் கீற்று

    வெளிச்சக் கீற்று

    ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம். இதற்கிடையில் கொரோனா வேறு, உலகை தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக வருகிற செய்திகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக் கீற்று தெரிகிறது.

    காத்தோடு காத்தாக

    காத்தோடு காத்தாக

    ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது. விரைவில் ஜெயிலைப் பற்றிய நல்ல செய்தி காத்தோடு காத்தாக பரவும் என்ற நம்பிக்கையோடு இந்த நாளைத் திறக்கிறேன். இவ்வாறு இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார். இதனால் லாக்டவுன் முடிந்ததும் ஜெயில் படம் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.

    English summary
    Director Vasanathabalan has written about his film Jail in his facebook page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X