மணிரத்னம் சொன்ன அந்த வார்த்தை!.. அதுவே போதும்!! - நவரசா இயக்குனர் வசந்த் பேட்டி
சென்னை: மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள், 9 கதைகள் என அந்தோலஜி திரைப்படமாக ஆகஸ்ட் 6ம் தேதி வெளிவரவுள்ளது நவரசா.
Recommended Video
அதில் ஒரு கதையை இயக்குனர் வசந்த் இயக்கியுள்ளார். அதில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
நவரசா படம் குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளார் இயக்குனர் வசந்த்.

எதிர்பார்ப்பு உள்ளது
நவரசா படத்தில் நீங்கள் எதிர்பார்த்து காத்துள்ள கதை எது என்ற கேள்விக்கு, அரவிந்த் சாமி மிகவும் அனுபவமுள்ள நடிகர் ஆவார். அவர் இயக்கும் கதையை தான் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் வரவுள்ள கதை மீதும் எதிர்பார்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

பாராட்டிய இயக்குனர்
இயக்குனர் வசந்த் இயக்கும் கதையில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த கதைக்கு பாயசம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருவி படத்திலிருந்து அதிதி பாலனை பிடிக்கும், இதில் நன்றாக நடித்துள்ளார் எனவும் முக்கியமாக டெல்லி கணேஷ் சிறப்பாக நடித்துள்ளார் எனவும் தன் கதையில் நடித்த நடிகர்கள் குறித்து இயக்குனர் வசந்த் பாராட்டி பேசியுள்ளார்.

ஆசை, நேருக்கு நேர்
இந்த படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம் குறித்து பேசிய வசந்த், தன்னுடைய ஆசை & நேருக்கு நேர் ஆகிய படங்களை மணிரத்னம் தான் தயாரித்தார். எங்களுடைய நட்பு பல ஆண்டு காலமாக உள்ளது. அவர் தன்னை நண்பர் என அழைத்தாலும் தான் அவரை அதைத்தாண்டி ஒரு வழிகாட்டியாக தான் பார்க்கிறேன் எனவும், இந்த படத்தை பார்த்த பின் Fantastic என்று அவர் சொன்ன வார்த்தையே தனக்கு போதும் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

OTT தளங்கள்
அந்தோலஜி படங்கள் குறித்து பேசிய இயக்குனர் வசந்த் Linear முறையில் ரொம்ப நாட்களாக நாம் கதைகளை பார்க்கிறோம், கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்க வேண்டும் என்ற கால கட்டத்தில் இருப்பதால் அந்தோலஜி படங்களை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். OTT தளங்களையும் ஆதரித்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











