மீண்டும் நடிகராகிறார் வெங்கட் பிரபு...ஜோடி யாருன்னு தெரியுமா ?
சென்னை : ஏப்ரல் மாதத்தில், சிவகாசி உள்ளிட்ட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடத்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தை இயக்கி, டைரக்டராகவும் அவதாரம் எடுத்தார்.
சென்னை 28, சரோஜா, சென்னை 28 பார்ட் 2, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து, டாப் டைரக்டர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் வெங்கட் பிரபு. ஜெய், வசந்த் விஜய் உள்ளிட்ட நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் வெங்கட் பிரபு தான்.

காத்திருக்கும் மாநாடு
லேட்டஸ்டாக வெங்கட் பிரபு, சிம்புவை வைத்து இயக்கிய அரசியல், த்ரில்லர் படமான மாநாடு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. விரைவில் படத்தின் செகண்ட் லுக், டிரைலர், ரிலீஸ் தேதி போன்றவை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயுத பூஜைக்கு படம் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஆக்டிங்
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெங்கட் பிரபு நடிக்க உள்ளார். டைரக்டர் அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கும் புதிய படத்தின் மூலம் தான் வெங்கட் பிரபு நடிகராக ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். அருணாச்சலம் வைத்தியநாதன் ஏற்கனவே சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கி உள்ளார்.

அம்மா ரோலில் சினேகா
தற்போது மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்த கதை ஒன்றை இயக்க உள்ளார். இந்த கதையை சொன்னதும் சினேகா, மிகவும் பிடித்துள்ளதாக உடனே ஓகே சொல்லி விட்டார். இந்த படத்தில் கண்டிப்பான அம்மா ரோலில் தான் சினேகா நடிக்கிறாராம்.

வெங்கட் பிரபுவிற்கு ஜோடி
சினேகாவின் கணவர் ரோலில் தான் வெங்கட் பிரபு நடிக்க போகிறார். இந்த படத்திற்கு சாப் பூட் த்ரீ என பெயரிடப்பட்டுள்ளது. கதை மிகவும் பிடித்ததால் தான் இந்த படத்தில் நடிக்க வெங்கட் பிரபுவும் உடனே ஓகே சொல்லி விட்டாராம்.

வித்தியாசமான அம்மா
இந்த படத்தில் சினேகாவின் கேரக்டர் பற்றி அருணாச்சலம் வைத்தியநாதன் கூறுகையில், வழக்கமாக நாம் சினேகாவை சிரித்த முகத்துடன், சாஃப்டான கேரக்டர்களில் தான் பார்த்துள்ளோம். இந்த படத்தில் அம்மா கேரக்டரில் அவர் நடிக்கிறார். ஆனால் அது வித்தியாசமான அம்மா கேரக்டர். மிகவும் அதிகார தோரணையில் உள்ள பெண்ணாக நடிக்க உள்ளார் என்றார்.

நான் அவரின் ரசிகன்
மேலும் வெங்கட் பிரபு பற்றி கூறுகையில், மிகவும் சுவாரஸ்யமான, வேடிக்கையான சினேகாவின் கணவர் கேரக்டரில் தான் வெங்கட் பிரபு நடிக்கிறார். வெங்கட் பிரபுவின் நடிப்பிற்கு நான் மிகப் பெரிய ரசிகன் அதனால் தான் இந்த ரோலுக்கு அவரை தேர்வு செய்தேன். ஏற்கனவே உன்னை சரணடைந்தேன் படத்திலும் அவர் சிறப்பாக நடித்திருந்தார். இந்த ரோலில் நடிக்க அவரும் உடனடியாக ஒப்புக் கொண்டார் என்றார் டைரக்டர்.

சென்னையில் ஷுட்டிங்
வெங்கட் பிரபு - சினேகா இணையும் சாட் பூட் த்ரீ படத்தின் ஷுட்டிங் சென்னையில் நேற்று துவங்கியது. சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலேயே இந்த படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











