அடுத்த படத்திற்கு தயாரான வெங்கட் பிரபு...ஹீரோ யார் தெரியுமா ?
சென்னை : மாநாடு, மன்மதலீலை படங்களைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் டைரக்டர் வெங்கட் பிரபு. இவரின் புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 100 கோடிகளை தாண்டி வசூலையும் அள்ளிக் குவித்தது. 2021 ல் டைம் லூப்பை மையமாகக் கொண்டு, ஆக்ஷன் த்ரில்லர் படமாக மாநாடு படத்தை இயக்கி, மாஸ் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு, அதைத் தொடர்ந்து ரொமான்டிக் படமாக மன்மதலீலை படத்தை இயக்கி அதையும் வெற்றி பெற வைத்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த மன்மதலீலை
வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீசான மன்மதலீலை படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களைக் கொடுத்ததால் தமிழ் சினிமாவின் முக்கியமான டைரக்டர்களில் ஒருவராக வெங்கட் உயர்ந்துள்ளார். இந்நிலையில் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்ட வெங்கட் பிரபுவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

வெங்கட்பிரபுவின் புதிய படம்
என்சி 22 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாம். இது பற்றிய அறிவிப்பை வெங்கட் பிரபு சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனத்தின் ஸ்ரீநிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கிறார்.

விரைவில் அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கும் 11 வது படமான இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். என்சி 22 படத்தின் அறிவிப்பை நாக சைதன்யா மற்றும் தயாரிப்பாளருடன் இருக்கும் போட்டோவுடன் வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

மதல் தெலுங்கு படம்
வெங்கட் பிரபு இயக்கும் முதல் பைலிங்குவல் படம் இது என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே போல் தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கும் முதல் படம் இதுவாகும். நாக சைதன்யா நடித்த Thank You படம் ரிலீசுக்கு தயாராகி வரும் வேளையில் அவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்துள்ளதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











