அப்பாவால் கெட்டுப் போகிறார் பிரசாந்த்...தியாகராஜன் முன் இயக்குனரின் பரபரப்பு பேச்சு
சென்னை : அப்பாவால் தான் நடிகர் பிரசாந்த் கெட்டு போவதாக மேடையில் தியாகராஜன் முன்னிலையிலேயே பிரபல டைரக்டர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது. தொடர்ந்து அவர் சொன்ன பல விஷயங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தனது 17 வது வயதிலேயே ஹீரோ ஆனவர் பிரசாந்த். பல பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்து, பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். 1990களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த பிரசாந்த் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, வின்னர் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.

பிரசாந்த் ரீஎன்ட்ரி
2004 ம் ஆண்டிற்கு பிறகு பிரசாந்த் நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன. இதனால் ஒரு கட்டத்தில் ஃபீல்ட் அவுட் ஆகும் நிலைமைக்கு வந்தார் பிரசாந்த். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது அப்பாவும், நடிகருமான தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் அந்தகன் படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி ஆக உள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

அப்பா தான் கெடுக்கிறார்
இந்நிலையில் அந்தகன் பட விழா சென்னையில் நடைபெற்றது. இதில் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, டைரக்டர் வெங்கடேஷ், இசையமைப்பாளர் தீனா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய டைரக்டர் ஏ.வெங்கடேஷ், அப்பா தான் பிள்ளைய கெடுக்குறார்ன்னு இன்டஸ்ட்ரில ஒரு பேச்சு இருக்கு. பிரசாந்த்தின் பல படங்கள் தோல்விக்கும் அவரது அப்பா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

பிரசாந்த் சொன்ன செம பதில்
அப்பாவின் தலையீடு, முடிவுகள் தான் காரணம். அது தான் பிரசாந்த் படங்களின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என பலரும் சொல்லி வந்தனர். ஒரு கால கட்டத்தில் அதை ஒரு நாள் பிரசாந்த்திடமே சொல்லி விட்டேன். அதற்கு அவர், எந்த அப்பா சார் பிள்ளை உருபடாம போகனும்னு நினைப்பாங்க. எனக்கு எல்லாமே என் அப்பா தான் சார் என்று மிகவும் கெத்தா, நம்பிக்கையா, பெருமையா அப்பா பற்றி தன் அபிப்ராயத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார் என்றார்.

தியாகராஜனே சொன்ன தகவல்
சமீபத்தில் பேட்டி ஒன்றிலும் நடிகர் தியாகராஜன் இந்த விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். தனது தலையீடு காரணமாக தான் பிரசாந்த்திற்கு பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனதாக பலரும் சொல்லி வந்தார்கள் என்று கூறி இருந்தார். இதை டைரக்டரும் கூறி இருப்பது, அதற்கு பிரசாந்த் அளித்துள்ள பதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











