விடுதலை ஷூட்டிங் தாமதமாக விஜய் சேதுபதி தான் காரணமா?: நெட்டிசன்களுக்கு வெற்றிமாற்னின் சுளீர் பதில்

சிறுமலை: வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் நடைபெற்று வருகிறது.
சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள விடுதலை இரண்டு பாகங்களாக வெளியாகிறது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நடந்து வரும் விடுதலை படத்தின் ஷூட்டிங் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை
அசுரன் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படத்தை தொடங்கினார் இயக்குநர் வெற்றிமாறன். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை பின்னணியாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தின் ஷூட்டிங், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என வெற்றிமாறனின் பிறந்தநாளில் அறிவிப்பு வெளியானது.

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை

அசுரன் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படத்தை தொடங்கினார் இயக்குநர் வெற்றிமாறன். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை பின்னணியாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தின் ஷூட்டிங், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என வெற்றிமாறனின் பிறந்தநாளில் அறிவிப்பு வெளியானது.

தாமதமாகும் விடுதலை ஷூட்டிங்

தாமதமாகும் விடுதலை ஷூட்டிங்

அசுரன் படத்தை முடித்ததுமே விடுதலை ஷூட்டிங்கை தொடங்கினார் இயக்குநர் வெற்றிமாறன். ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வரவில்லை. விடுதலை படத்தின் ஷூட்டிங் தாமதத்திற்கு விஜய் சேதுபதி தான் காரணம் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், விஜய் சேதுபதி சரியாக கால்ஷீட் கொடுக்காததால் தான் விடுதலை படப்பிடிப்பு பதியிலேயே நிற்பதாக தகவல்கல் வெளியாகின. ஆனால், இதுகுறீத்து படக்குழு தரப்பில் இருந்து எந்த பதிலும் வராமல் இருந்தது.

விஜய் சேதுபதி காரணம் இல்லை

விஜய் சேதுபதி காரணம் இல்லை

இந்நிலையில் விடுதலை படத்தின் சூட்டிங் தாமதமானது குறித்தும், விஜய் சேதுபதி மீதான நெட்டிசன்களின் விமர்சனம் பற்றியும் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் கொடுத்துள்ளார். படப்பிடிப்புத் தளமான சிறுமலையில் இருந்து முன்னணி பத்திரிகையின் யூடியூப் சேனலுக்காக பேட்டிக் கொடுத்துள்ள வெற்றிமாறன், விடுதலை சூட்டிங் தாமதமாக விஜய் சேதுபதி காரணம் இல்லையென கூறியுள்ளார். விஜய் சேதுபதியிடம் நான் 8 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

40 நாட்கள் கொடுத்த விஜய் சேதுபதி

40 நாட்கள் கொடுத்த விஜய் சேதுபதி

தொடர்ந்து பேசியுள்ள வெற்றிமாறன், 8 நாட்கள் கால்ஷீட்டில் ஷூட்டிங் வந்த விஜய் சேதுபதி தற்போது 40 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ரசிகர்களின் திருப்திக்காக படம் எடுக்கும் போது தாமதம் ஆகதான் செய்யும். எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, விஜய் சேதுபதிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. 8 நாட்களுக்குப் பதிலாக 40 நாட்கள் வரை ஒத்துழைப்புக் கொடுத்து நடித்துள்ளார். இந்தமுறை மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X