Don't Miss!
- News
டெல்லியின் "டேஷர்".. யார் இந்த ஸ்வேதா செராவத்? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம்!
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சமுத்திரகனியின் ரைட்டர் படத்தை பார்த்துட்டு இயக்குநர் வெற்றிமாறன் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக ஏகப்பட்ட நல்ல கதைகளை படமாக்கி வருகிறார்.
Recommended Video
சமுத்திரகனி நடிப்பில் இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகி உள்ள ரைட்டர் திரைப்படத்தையும் பா. ரஞ்சித் தான் தயாரித்துள்ளார்.
பிக்பாஸ்
வீட்டுக்குள்
இருக்கும்போதே
குவியும்
வாய்ப்பு...
வருண்
கைவசம்
உள்ள
படங்களை
பாருங்க!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள அந்த படத்தின் ப்ரீமியம் காட்சியை பார்த்து விட்டு இயக்குநர் வெற்றிமாறன் வெகுவாக பாராட்டி உள்ளார்.

பா. ரஞ்சித் தயாரிப்பு
அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என ஒரு பக்கம் இயக்கத்தில் கலக்குவதை போலவே தயாரிப்பிலும் சிறந்த படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படங்களை தொடர்ந்து தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் ரைட்டர் படம் தயாராகி உள்ளது.

சமுத்திரகனியின் ரைட்டர்
இயக்குநர் ஃப்ராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள ரைட்டர் திரைப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் ஏலே, வினோதய சித்தம், தலைவி, சித்திரை செவ்வானம் என ஏகப்பட்ட படங்கள் வெளியாகி அவரது நடிப்பு திறமைக்கு நல்ல தீனி போட்டுள்ளது. விரைவில் வெளியாக உள்ள ரைட்டர் திரைப்படம் சமுத்திரகனியை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் நகர்த்தி செல்லும் என படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டி உள்ளனர்.

ஸ்பெஷல் ஷோ
சத்யம் திரையரங்கில் ரைட்டர் படத்தின் ப்ரீமியர் காட்சியை தயாரிப்பாளர் பா. ரஞ்சித் நேற்றிரவு ஏற்பாடு செய்திருந்தார். இயக்குநர்கள் வெற்றிமாறன், சசி, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படத்தை பார்த்து ரசித்தனர். இயக்குநர் வெற்றிமாறன் ரைட்டர் படத்தை வெகுவாக பாராட்டியது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வெற்றிமாறன் பாராட்டு
"ரைட்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான படம். ரொம்பநாளாக விவாதிக்கக்கூடிய பேசாமலேயே இருந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள். காவல்துறையினரின் வலிகள், மன அழுத்தத்தை இந்த ரைட்டர் படம் பேசுகிறது. யாரோ ஒருவர் இதனை படமாக எடுத்து விவாதத்துக்குள்ளாக்கியதற்கே ரொம்ப சந்தோஷமாக உள்ளது."என படத்தை பார்த்த வெற்றிமாறன் வெகுவாக பாராட்டி உள்ளார்.

பெரிய ஹிட் ஆகும்
இயக்குநர் சசி கூறும்போது, "ரைட்டர் அற்புதமான படம். நிஜமான பிரச்சனைகளை கையாள்வதில் இந்தியளவிலேயே தமிழ் சினிமாதான் சரியாகக் காண்பிக்கிறது. படக்குழுவினருக்கு தலைவணங்குகிறேன். சமுத்திரக்கனி, இனியா, ஹரி என ஒவ்வொருவரும் படத்தில் வாழ்ந்துள்ளனர். ரைட்டர் பெரிய ஹிட் ஆகும்" என்று மனமார பாராட்டியுள்ளார்.

மாரி செல்வராஜ் பாராட்டு
"சமுத்திரக்கனி சார் திரை வாழ்க்கையில் 'ரைட்டர்' முக்கியமானதொரு படம். அவரை அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டுச் செல்லக்கூடியப் படம். இயக்குநர் ஃப்ராங்க்ளினின் உழைப்பு மிகப்பெரியது. ரொம்ப எமோஷனலானப் படம். சின்னதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டால் கூட வேறொரு இடத்திற்குச் சென்றுவிடும். சமுத்திரக்கனி சாரின் உழைப்பு அபரீதமானது. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர்"என இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டி உள்ளார்.