twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளைஞர்களே உங்கள் உயிர் உங்கள் குடும்பத்தினருக்கு முக்கியம் பொறுப்புடன் இருங்கள் வெற்றிமாறன் உருக்கம்

    |

    சென்னை : வெண்ணிலா கபடிக்குழு, அசுரன் படத்தில் நடிகர் நிதீஷ் வீரா கொரேனா தொற்றால் நேற்று உயிரிழந்தார்.

    Recommended Video

    Mask சரியா போடுங்க.. பொறுப்பா இருங்க - Vetrimaran

    அவருக்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழின் மிகச்சிறந்த மூத்த கதைசொல்லி... மறைந்த கி.ரா.விற்கு உதயநிதி அஞ்சலி தமிழின் மிகச்சிறந்த மூத்த கதைசொல்லி... மறைந்த கி.ரா.விற்கு உதயநிதி அஞ்சலி

    அதில், இளைஞர்களே உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தார்க்கும் முக்கியம். பொறுப்புடன் இருங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வேகமாக பரவும் கொரோனா

    வேகமாக பரவும் கொரோனா

    இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, கடந்த ஆண்டு பரவிய முதல் அலையைக் காட்டிலும் படுபாதகமாக அமைந்துள்ளது. கொரோனா பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவருகின்றனர.

    இரங்கல்

    இரங்கல்

    வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, அசுரன் படங்களில் நடித்த பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "நண்பர் நித்திஷ் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று எனக்கு தகவல் சொன்னாங்க. சரி எப்படி இருக்கார்னு விசாரிச்சேன், இன்னும் இரண்டு நாளில் முன்னேற்றம் இருக்கும்னு சொன்னாங்க ஆனால், அவர் இறந்துட்டார்னு செய்தி வந்துச்சு.

    பெரிய இழப்பு

    பெரிய இழப்பு

    அசுரன் படத்திற்கு பிறகு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் தனது வாழ்க்கையை திரும்ப தொடங்குவதாக கூறிக்கொண்டு இருந்தார். ஆனால், அவருடைய இறப்பு அவருடைய குடும்பத்துக்கு பெரிய இழப்பு. அவருடைய நெருங்கிய நண்பர்களுகும் என்னைப் போல அவரைத் தெரிந்தவர்களுக்கும் ஒரு பெரிய இழப்பு.

    கவனமாகவும் இருக்க வேண்டும்

    கவனமாகவும் இருக்க வேண்டும்

    நாம் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலம் இது. கொரோனா பாஸிட்டிவாக இருந்தால், தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் சரியான நேரத்துக்கு விரைவாக மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர்களின் சிகிச்சை நமக்கு சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு பெரிதாக இல்லை என்கிறார்கள்.

    வீட்டில் இருங்கள்

    வீட்டில் இருங்கள்

    இளைஞர்களுக்கு பொறுப்பாக வீட்டில் இருங்கள், மாஸ்க் அணிந்துகொண்டு வெளியில் செல்லுங்கள். உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தார்க்கும் முக்கியம். பொறுப்புடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை ஜெயிக்க முடியும். பாதுகாப்பாக இருங்கள் என உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Director Vetrimaaran Talks about nitish veera death
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X