twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட லைகா.. இது முதல்முறை அல்ல ஏற்கனவே நடந்து இருக்கு தெரியுமா?

    |

    சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 வது படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், லைகா நிறுவனம் அவரை கழட்டி விட்டுள்ளது.

    இயக்குநர் விக்னேஷ் சிவன், சிம்பு நடித்த போடா போடி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

    அந்த படத்தைத் தொடர்ந்து நானும் ரௌடிதான் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கினார்.இந்த படம் விக்னேஷ் சிவனை இயக்குநராக வெற்றி பெற செய்தது மட்டுமில்லாமல், நயன்தாராவுடனான காதலையும் பெற்றுத்தந்தது.

    அடக்கடவுளே.. ஏகே62 படத்தோட இயக்குநரை மாற்றுகிறாரா அஜித்? விக்னேஷ் சிவனுக்கு பதில் இவரா? அடக்கடவுளே.. ஏகே62 படத்தோட இயக்குநரை மாற்றுகிறாரா அஜித்? விக்னேஷ் சிவனுக்கு பதில் இவரா?

    காதல், கல்யாணம்

    காதல், கல்யாணம்

    நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு காதல் ஜோடியாக வலம் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன நான்கு மாதத்திலேயே வாடகைத் தாய் மூலம் நயன் விக்கி இருவரும் இரட்டைக்குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். குழந்தைகளின் க்யூட்டான புகைப்படத்துடன் கிறிஸ்துமஸ், நியூ இயருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    காத்துவாக்குல ரெண்டு காதல்

    காத்துவாக்குல ரெண்டு காதல்

    கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனுக்கு ஒரு நல்ல ஆண்டாக இருந்தது, கல்யாணம், ஹனிமூன் என பிஸியாக இருந்த விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து "காத்துவாக்குல ரெண்டு காதல்" என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான இரண்டு காதலைக் கொண்ட இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

    அஜித் 62

    அஜித் 62

    இந்த படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்பட்டது. அஜித்தின் துணிவு படம் முடிந்த பிறகு, அஜித் 62 திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு துணிவு பட வெளியீட்டுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கதை பிடிக்கவில்லை

    கதை பிடிக்கவில்லை

    அஜித்தின் துணிவு படம் வெளியானதை அடுத்து, அஜித்தின் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது. விக்னேஷ் சிவன் தயார் செய்திருந்த கதை அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் பிடிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளனர். மேலும், அஜித் 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கழட்டி விட்ட லைகா

    கழட்டி விட்ட லைகா

    மேலும், லைகா நிறுவனம் இதற்கு முன்பும் விக்னேஷ் சிவன் படம் எடுப்பதாக அறிவித்துவிட்டு படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் கழட்டிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டு லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் கைவிரித்துள்ளது. அதே வேலையைத் தான் தற்போது லைகா நிறுவனம் மீண்டும் செய்துள்ளது. இதனால், விக்னேஷ் சிவன் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Director Vignesh Shivan has been dropped from Ajith 62 by Lyca, This is tha reason
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X