»   »  முதல் முறையாக ஜெயம் ரவியுடன் இணையும் இயக்குநர் விஜய்

முதல் முறையாக ஜெயம் ரவியுடன் இணையும் இயக்குநர் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் விஜய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி. இருவரும் இணையும் இந்தப் படம் நாளை விநாயகர் சதுர்த்தியன்று தொடங்குகிறது.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இணைகின்றனர் ஜெயம்ரவி- விஜய்.

Director Vijay joins with Jayam Ravi

இப்படம் குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறுகையில், "ஒரு நல்ல தொடக்கத்தை முக்கியமான நாளன்று ஆரம்பிப்பதுதான் சிறப்பு. 'கிரீடம்' படத்திற்கு பிறகு என்னுடைய ஒளிப்பதிவாளர் திருவுடன் மீண்டும் இந்த படத்திற்காக இணைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது.

யதார்த்தமான காட்சிகளை அற்புதமாக உருவாக்கும் திறமை படைத்த ஒரு கலைஞர் திரு. ஜெயம் ரவியை ஒரு நடிகராக மட்டுமில்லாமல் என்னுடைய உடன் பிறவா சகோதரராகவும்தான் நான் பார்க்கிறேன். அவரோடு இணைந்து பணிபுரிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எனது ஆசை இந்த படத்தின் மூலம் இரட்டிப்பாகி உள்ளது,'' என்றார்.

English summary
Director Vijay is joining with Jayam Ravi for the first time and the shoot will be begins from Tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil