»   »  மனம், 24 இயக்குநர் விக்ரம் குமாருக்கு இன்று திருமணம்.. சவுண்ட் எஞ்ஜினீயரை மணந்தார்!

மனம், 24 இயக்குநர் விக்ரம் குமாருக்கு இன்று திருமணம்.. சவுண்ட் எஞ்ஜினீயரை மணந்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

யாவரும் நலம், மனம், 24 படங்களின் இயக்குநர் விக்ரம் குமாருக்கும் ஸ்ரீநிதிக்கும் இன்று காலை திருமணம் நடந்தது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சமீபத்தில் சூர்யா நடித்து வெளியான படம் 24. சூர்யா படங்களில் அதிக வசூல் குவித்த படம் இது.

Director Vikram Kumar - Srinidhi wedding

இந்தப் படத்தில் சவுண்ட் எஞ்ஜினீயராகப் பணியாற்றியவர் ஸ்ரீநிதி. ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவிலும் இதே பணியைச் செய்து வருகிறார்.

Director Vikram Kumar - Srinidhi wedding

விக்ரம் குமாரும் ஸ்ரீநிதியும் 24 படத்தில் பணியாற்றும்போதே காதலிக்கத் தொடங்கினர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததால், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இன்று இருவருக்கும் திருமணம் நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

English summary
Director Vikram Kumar - Srinidhi wedding was held Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X