வலிமை படத்தின் கதை இது தான்...ஓப்பனாக சொன்ன டைரக்டர் ஹச்.வினோத்
சென்னை : ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்க்கும் படமாக மாறி உள்ளது வலிமை. இதுவரை வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை வலிமை நிச்சயம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள வலிமை படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அதோடு க்ளிம்ப்சில் இடம்பெற்ற அஜித்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகள் ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.

வாய் பிளக்க வைத்த ஸ்டன்ட்
பைக்கிலேயே ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு அஜித் தாவும் காட்சிகள் பலரையும் வாய் பிளந்து ரசிக்க வைத்துள்ளது. ஜனவரி 14ம் தேதி வலிமை படம் ரிலீசாகும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வினோத் அளித்த பேட்டி
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு டைரக்டர் ஹச்.வினோத் சமீப காலமாக பேட்டி கொடுக்க துவங்கி உள்ளார். அதில் வலிமை பற்றிய சில தகவல்களையும் அவர் பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் டிரைலர் எப்போ ரிலீஸ் செய்வீர்கள் என அப்டேட் கேட்க துவங்கி விட்டனர்.

இது தான் கதை
இதுவரை வெளியான தகவல்களை வைத்து வலிமை படம் பைக் ரேஸ் செய்யும் கேங்கை பற்றியது என கூறப்படுகிறது. ஆனால் வினோத் தனது பேட்டியில் அதை மறுத்துள்ளார். அவர் தனது பேட்டியில், இது பைக் கேங்க் பற்றிய கதை அல்ல. பைக் ரேஸ் காட்சிகளை முக்கியமாக கொண்டதாக இருந்தாலும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பற்றியது. அவர்களை போலீசான ஹீரோ அஜித் அழித்து, பிடிப்பது தான் கதை என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

வினோத்தின் கோரிக்கை
அதே சமயம் வலிமை படத்திற்கு வருபவர்கள் யாரும் கதை இது தான், படம் இப்படி தான் இருக்கும் என எதிர்பார்த்து அல்லது உங்களின் கற்பனையுடன் சென்று பார்க்க வேண்டாம். தெளிவான, பிளாங்க் மனதுடன் சென்று படத்தை பாருங்கள். அப்போது தான் படத்தை உங்களால் என்ஜாய் பண்ண முடியும் எனவும் ரசிகர்களை வினோத் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











