வலிமை அடுத்த அப்டேட் என்ன, எப்போ... டிரெண்டிங்கான டைக்டர் வினோத்தின் பேட்டி

சென்னை : அஜித் நடித்த வலிமை படத்தின் அடுத்த அப்டேட் என்ன, எப்போ வெளியாக உள்ளது என்ற தகவலை டைரக்டர் வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் இப்போதே வேற லெவலில் கொண்டாட துவங்கி விட்டனர்.

நேற்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை 2022 ம் ஆண்டு ஜனவரி 14 ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

லாபத்தை துவக்கிய வலிமை

லாபத்தை துவக்கிய வலிமை


ரிலீசிற்கான தேதி நெருங்கி வருவதால் வலிமை படத்தின் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இசை உரிமம், டிஜிட்டல், சேட்டிலைட் உரிமம், தியேட்டர் வெளியீட்டு உரிமம் உள்ளிட்டவைகள் ரூ.161 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது. வலிமை படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.150 கோடி. ஆனால் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலேயே போட்ட பணத்தை மட்டுமல்ல, லாபத்தையும் எடுத்து விட்டது.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

எதிர்பார்ப்பு அதிகரிப்பு

வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் துவங்கி இதுவரை வெளியிடப்பட்ட டீசர் க்ளிம்ப்ஸ், ஃபஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் என அனைத்தும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் விசில் தீம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

விசில் தீம் சீக்ரெட்

விசில் தீம் சீக்ரெட்

இந்த விசில் தீம் வலிமை படத்தில் அஜித்தின் கேரக்டரை சொல்வதாக அமைந்திருந்தது. தலை நரைத்தது, இளமை தோற்றம் என இரு வேறுபட்ட தோற்றங்களில் அஜித் தோன்றியதால் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்த அப்டேட் என்ன

அடுத்த அப்டேட் என்ன

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த வினோத்திடம் வலிமை அடுத்த அப்டேட் என்ன, அது எப்போது வெளியிடப்படும் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வினோத், அடுத்த அப்டேட் வேறென்ன டிரைலர் தான் என தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் புத்தாண்டை முன்னிட்டும், அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படியும் டிசம்பர் 30 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Valimai படத்தின் Shooting-ல் தல உடன் நடந்த சுவாரசிய சம்பவம் | H.Vinoth Exclusive
டிரெண்டிங்கில் வலிமை டிரைலர்

டிரெண்டிங்கில் வலிமை டிரைலர்

வலிமை டிரைலர் வெளியிடப்பட உள்ள தகவல் வெளியானதும் ட்விட்டரில் #ValimaiTrailer என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதில் வலிமை படம் பற்றிய ஏராளமான தகவல்களை ரசிகர்களை பகிர்ந்து வருகிறார்கள். வலிமை டிரைலர் மற்றும் பட ரிலீசிற்காக காத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X