Don't Miss!
- News
பட்ஜெட்டில் "முக்கிய" அறிவிப்பு.. அடையாள ஆவணம் ஆகும் பான் கார்டு.. நிதி பரிவர்த்தனைக்கு கட்டாயம்!
- Finance
பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு.. சாமானியர்கள் ஹேப்பி!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இயக்குநர்-எழுத்தாளர் சங்க மோதல் முடிவுக்கு வந்தது?..ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு
இயக்குநர்கள் சங்கத்திற்கும், எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் இருந்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர்கள் கதைகளை பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டணம், உறுப்பினர் கட்டணம் போன்ற காரணங்களால் கதைகளை இயக்குநர் சங்கமே தனியாக பதிவு செய்ய முடிவு செய்திருந்தது.
இயக்குநர்கள் கதாசிரியர்கள் இல்லாத நிலையை உருவாக்குகிறார்கள், கதைகளை இயக்குநர்களே ஹீரோக்களுக்கு ஏற்ப முடிவு செய்யும் நிலை உள்ளதாக பாக்யராஜ், வசந்தபாலன் போன்றோர் பொதுவாக தங்கள் கருத்தாக பதிவு செய்திருந்தனர்.
நீங்க
மட்டும்
சங்கர்
படம்
பண்ணுவீங்க.
ஆனா
நா
இத
பண்ணணுமா?
2
இயக்குநர்கள்
உரையாடல்...
யார்
தெரியுமா?

தமிழ் திரையுலகம் சந்திக்கும் புதிய பிரச்சினை
திரையுலகம் தற்போது புதிய மாறுதல்களை சந்தித்து வருகிறது. முன்னர் கதையை தயார் செய்வார்கள், அதை திரைக்கதையாக ஒருவர் மாற்றுவார், வசனமும் அவரே எழுதுவார். கதை, திரைக்கதை வசனம் என சிலர் எழுதுவார்கள். கதை திரைக்கதை, வசனம் இயக்கம் என பல இயக்குநர்கள் வந்தனர். ஆனால் சமீப காலமாக திரைக்கதைகளுக்கான மவுசு குறைந்து நடிகர்களுக்கு ஏற்ப கதை எழுதுவது என ஆரம்பித்து அதுவும் ஒரு சம்பவமாக குறைந்து போனது.

நாயகர்களுக்காக கதை எழுதும் இயக்குநர்கள்
நாயகர்களுக்காக கதை எழுதுகிறேன், அவர்கள் கால்ஷீட் கிடைத்தால் போதும் பணம் பார்க்கலாம் எனும் போக்கு பல திறமையில்லாதவர்கள் திரைக்கு வந்து சில படங்களில் காணாமல் போவதும் நடக்கிறது. மகேந்திரன், பாலச்சந்தர், கே.எஸ்.கோபல கிருஷ்ணன், விசு, பாக்யராஜ் என பல திரைக்கதை ஆசிரியர்கள் உண்டு. ஆனால் சமீப காலங்களில் பெயர் சொல்லும் ஒரு கதாசிரியர்கள் தமிழ் திரையுலகில் இல்லை. எழுத்து-இயக்கம் என இயக்குநர்கள் பெயர் திரையில் வருகிறது.

திரைக்கதையாசிரியர்கள் பஞ்சம்
திரைக்கதாசிரியர் பஞ்சம் பற்றி வசந்தபாலன், பாக்யராஜ் உள்ளிட்டோர் கருத்தை பதிவு செய்து வந்துள்ளனர். இயக்குநர்கள் திரைக்கதை எழுதக்கூடாதா? என்று கேட்டால் பல நல்ல இயக்குநர்கள் திரைக்கதை ஆசிரியர்களாக வந்து பின்னர் இயக்குநர்களாகியுள்ளனர். பாலச்சந்தர், மகேந்திரன், விசு, பாக்யராஜ் என பல முன்னுதாரணங்கள் உண்டு. ஒரு கைதியின் டைரி மூலம் திரைக்கதை மன்னன் என்கிற பெயரை வாங்கி பாலிவுட்டிலும் கால் பதித்தார் பாக்யராஜ். ஆகவே திரைக்கதையை இயக்குநர்கள் எழுதுவது சாதாரண விஷயமே. ஆனால் ஹீரோவுக்காக கதை எழுதுவது அவர்கள் தனித்தன்மையை இல்லாமல் செய்துவிடுகிறது.

ஈகோ பிரச்சினையால் வெடிக்கும் மோதல்
தற்போது இந்த மோதல் வேறு வகையில் திரைக்கதை ஆசிரியர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கத்தினரிடையே முற்றி வந்தது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஈகோ கிளாஷ் தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த மோதல் முற்றி திரைக்கதைகளை இனி திரைக்கதாசிரியர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இயக்குநர் சங்கத்திலேயே பதிவு செய்ய இயக்குநர் சங்கத்தினர் முடிவெடுத்தனர். ஆனால் இந்தப்பிரச்சினையில் தற்போது சுமுகமாக முடிந்துள்ளது.

இயக்குநர் சங்க நிர்வாகி ஆர்.கே.செல்வமணி அறிக்கை
இதுகுறித்து இயக்குநர் சங்கத்தின் சார்பில் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு, "எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் நமது சங்கத்திற்கும் நடைமுறையில் இருந்த கதை பதிவு ஒப்பந்தம் புதுப்பிக்காததாலும், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் சலுகை கட்டணம் மற்றும் கதை பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் நமது இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் கதைகளை நமது சங்கத்திலேயே பதிவு செய்யலாம் என முடிவு செய்திருந்தோம்.

பாக்யராஜ் தலைமையில் சுமூக பேச்சு
அக்.3 அன்று எழுத்தாளர் சங்க தலைவர் பாக்கியராஜ் தலைமையில் நமது சங்க நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அனைத்து பிரச்சனைகளையும் சுமுகமாக முடித்து தருகிறோம் எனவே எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆணிவேராக உள்ள கதை பதிவை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்ய ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். மேலும் உறுப்பினர்கள் சேர்க்கை கட்டணம் ரூ.4000 என இருந்ததை ரூ.2000 என குறைக்கவும் 2 வருடங்களுக்கு ஒரு முறை ரினியூவல் கட்டணம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யவும், வருட சந்தா முறையாக செலுத்தி வந்தால் ரினியூவல் கட்டணம் ஏதும் இன்றி மீதி 5000 கட்டினால் நிரந்தர உறுப்பினராக எழுத்தாளர் சங்கத்தில் சேர்க்கப்படுவர் என்கிற உறுதி மொழியும் வழங்கி உள்ளனர்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு
கதைப்பதிவு கட்டணம் 300, 500, 1000 ரூபாய் என்று இருந்ததை 50 பக்கங்களுக்கு ரூ. 300 மற்றும் 100 பக்கங்களுக்கு ரூ.500 என்றும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்னர். அது மட்டும் இன்றி கதை புகார் பிரச்சினை பெரிதாகவோ, ஏற்க முடியாததாக இருப்பின் நீதிமன்றத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டால் தன்னிச்சையாக செயல்படாமல் ஃபெப்சியுடன் கலந்து பேசி பின்னர் முடிவெடுக்கலாம் என்ற உறுதிமொழியும் அளித்துள்ளனர். இதற்கான கடிதம் முறைப்படி எழுத்தாளர் சங்க செயற்குழு நடத்தி நமக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம் பற்றி விவாதிப்பதற்கு நாம் சங்க அவசர செயற்குழு என்று நடத்தப்பட்டு சாதக, பாதகங்களை விவாதிக்கப்பட்டது.

சுமூகமான நிலை ஏற்பட்டது
இதில் இரு சங்க உறுப்பினர்களுக்கும் நன்மை ஏற்படுவதுடன் நமது சங்க உறுப்பினர்கள் வெறும் 7000 ரூபாயில் எழுத்தாளர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக இணைக்க கூடிய நல்ல வாய்ப்பு ஏற்படுவதாலும் எழுத்தாளர்கள் சங்கமும், இயக்குனர் சங்கமும் சமூகமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று நல்லெண்ணத்தில் எழுத்தாளர்கள் சங்க வேண்டுகோளை ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இனி கதைப்பதிவு எழுத்தாளர்கள் சங்கத்திலேயே தொடரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்". இவ்வாறு ஆர்கே செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.