»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பெயர் மாற்று விழாவை முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில்நடத்துவது என டைரக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட டைரக்டர்களுக்கான சங்கம் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என்றபெயரில் இதுவரை இருந்தது. இச்சங்கத்தின் பெயரை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என்றுஇயக்குநர்கள் மாற்றினர்.

இதையொட்டி இயக்குநர்களின் பொதுக்குழுக் கூட்டம் பிலிம்சேம்பர் அரங்கில் தலைவர் பாரதிராஜா தலைமையில்நடந்தது. டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், பாலுமகேந்திரா, ஆர்.சி.சக்தி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

கூட்டத்தில் சங்கப் பெயரை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என மாற்றியதற்கான விழா நடத்துவது,பெயர் மாற்ற விழாவுக்கு தமிழக முதல்வரை அழைப்பது, அண்ணா பிறந்தநாள் விழாவை சென்னையில்பிரமாண்டமாக நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை ஆதரித்து டைரக்டர்கள் பாரதிராஜா, முக்தா சீனிவாசன், எஸ்.ஏ.சந்திரசேகரன், விக்ரமன்,ஆர்.கே.செல்வமணி, ராமராஜன், ராஜ்கிரண், சுந்தர்.சி. சேரன், நாசர், கதிர், சித்ரா லட்சுமணன், மகேந்திரன்ஆகியோர் பேசினார்கள்.

Read more about: directors, film, function
Please Wait while comments are loading...