»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தற்கொலை செய்து கொண்ட நடிகை விஜியின் காதலன் ரமேஷை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்றுகோரி தேசிய மகளிர் கழகம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகை விஜி கடந்த மாதம் 27- ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்டதற்குஇயக்குனர் ரமேஷ்தான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தலைமறைவான இயக்குனர் ரமேஷை போலீஸார் கைது செய்து மத்திய சிறையில்அடைத்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் ரமேஷ், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமைமனுத் தாக்கல் செய்தார்.

ரமேஷூக்கு ஜாமீன் தரக் கூடாது என்று கோரி தேசிய மகளிர் கழகத்தின் தலைவர் ஓவியம் ரஞ்சன், வழக்கறிஞர்கே.செல்வராஜ் மூலம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ரமேஷூக்கு ஜாமீன் கொடுத்தால் அது பெண்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும் என்றும் இவ்வழக்கில் சாட்சியம்அதிகம் உள்ளதால் ரமேஷை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil