»   »  ஜெயலலிதாவின் துணிவுக்கு அன்பான பாராட்டுகள்!- இயக்குநர்கள் சங்கம்

ஜெயலலிதாவின் துணிவுக்கு அன்பான பாராட்டுகள்!- இயக்குநர்கள் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் துணிவுக்கு அன்பான பாராட்டுகள் என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக ஆறாவது முறையாகப் பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Directors association wishes Jayalalithaa

இதுகுறித்து திரைப்பட இயக்குநர்கள் சங்கம், முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி:

'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்பதை தாரகமந்திரமாக கொண்டு 6-ஆவது முறையாக தமிழக முதல்வராக அமரவுள்ளீர்கள்.

தங்களின் (ஜெயலலிதா) அன்புக்குரலுக்கு அங்கீகாரம் அளித்து மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது, மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்து சாதனை புரிந்தவர் எம்.ஜி.ஆர். அவருக்குப் பின் தாங்களும் இந்தச் சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளீர்கள். இந்தச் சரித்திர சாதனைக்கு வாழ்த்துகள்.

நியாயமான கொள்கைகளில், குறிக்கோள்களில், மக்கள் நலச் செயல்பாடுகளில் எப்போதுமே மற்றவர்களிடமிருந்து தனித்து நின்று துணிவுடன் போராடும் உங்களின் (ஜெயலலிதா) துணிவுக்கு அன்பான பாராட்டுகள்.

English summary
Tamil cinema directors association has conveyed its wishes to CM Jayalalithaa for her record win in TN elections.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil