ஷங்கருக்காக இந்தியன் 2வில் இணைந்த 3 முன்னணி இயக்குநர்கள்: கமலுக்காக மட்டும் தான் வெயிட்டிங்

சென்னை: கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

லைகா நிறுவனத்துடன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்டும் தயாரிப்பில் இணைந்துள்ளதால் படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் முடிப்பதற்காக, ஷங்கருடன் 3 முன்னணி இயக்குநர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் தொடங்கிய இந்தியன் 2

மீண்டும் தொடங்கிய இந்தியன் 2

கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் 1996ல் வெளியான இந்தியன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. பல வருடங்களுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமலும் ஷங்கரும் மீண்டும் இணைந்தனர். அதன்படி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தியன் 2 ஷூட்டிங், கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினை போன்ற காரணங்களால் பாதியிலேயே நின்று போனது. ஆனால், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றியால், மீண்டும் தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

கமலுக்காக இணைந்த உதயநிதி

கமலுக்காக இணைந்த உதயநிதி

கமலின் விக்ரம் திரைப்படத்தை, அவரது ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்தது. ஆனால், அதன் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது. விக்ரம் திரைப்படம் வசூலை வாரி குவித்ததை அடுத்து, கமல் - உதயநிதி கூட்டணி மீண்டும் இந்தியன் 2 படத்தில் இணைந்தது. இந்த முறை லைகா நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிக்க ரெட் ஜெயன்ட் நிறுவனம் முடிவு செய்தது. கமலுக்காக உதயநிதி இணைந்த வேகத்தில், இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

ஷங்கருக்காக இணையும் 3 இயக்குநர்கள்

ஷங்கருக்காக இணையும் 3 இயக்குநர்கள்

இந்தியன் 2 பாதியிலேயே நின்று போயிருந்த நேரம், டோலிவுட் பக்கம் சென்ற ஷங்கர், ராம் சரண் நடிக்கும் 'RC 15' படத்தை தொடங்கினார். ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கியதால், ஷங்கருக்கு இரண்டு படங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், தன்னிடம் உதவியாளர்களாக வேலை பார்த்த 3 முன்னணி இயக்குநர்களை துணைக்கு அழைத்துள்ளாராம் ஷங்கர்.

கமலுக்காக மட்டும்தான் வெயிட்டிங்

கமலுக்காக மட்டும்தான் வெயிட்டிங்

இந்த தகவலின் படி, இயக்குநர்கள் வசந்தபாலன், அறிவழகன், சிம்புதேவன் மூவரும் இந்தியன் 2 படத்தில் இணைவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் 3 பேருமே சிறப்பான படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில், இந்த 3 இயக்குநர்களும் கமல் இல்லாத பகுதிகளை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் நடிக்கும் காட்சிகளை மட்டும் ஷங்கர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X