»   »  அஜீத் ஜோடியாகும் 'டர்ட்டி' கேர்ள் வித்யா பாலன்?

அஜீத் ஜோடியாகும் 'டர்ட்டி' கேர்ள் வித்யா பாலன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அஜீத்தை வைத்து வீரம் படத்தை எடுத்தார் சிறுத்தை சிவா. இந்நிலையில் அவர் மீண்டும் அஜீத்தை இயக்கவிருக்கிறார்.

அதற்கான கதையை தயார் செய்யும் வேலையிலும் இறங்கிவிட்டார்.

வித்யா

வித்யா

சிறுத்தை சிவா அஜீத்தை மீண்டும் இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட்டில் கலக்கி வரும் வித்யா பாலன் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிவா

சிவா

அஜீத் படத்திற்கான திரைக்கதை எழுதும் பணி ஜுன் மாத இறுதியில் தான் முடியும்.
அதன் பிறகே கதைக்கு ஏற்றார் போல் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வேன் என்றார் சிவா.

மனசெல்லாம்

மனசெல்லாம்

மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆனவர் வித்யா பாலன் தான். படப்பிடிப்பு துவங்கிய பிறகு அவருக்கு நடிப்பு வரவில்லை என்று கூறி த்ரிஷாவை நடிக்க வைத்துவிட்டனர்.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

பாலிவுட்டில் கலக்கும் வித்யா பாலனுக்கு கோலிவுட்டில் தற்போது வாய்ப்புகள் வருகிறபோதிலும் அதை அவர் ஏற்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Bollywood actress Vidya Balan may pair up with Ajith in the movie to be directed by Sruthai Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil