வாரிசு படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளம் தான் காரணமா? மகேஷ் பாபு ரசிகர்கள் இப்படி பொங்கி எழ?
சென்னை: விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையே தான் எப்போதும் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா சண்டை நடப்பது வழக்கம்.
ஆனால், சமீப காலமாகவே மகேஷ் பாபு ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே போக்கிரி படத்தில் வரும் 'யுத்தமே' பாடல் போல சண்டை எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கிறது.
திடீரென மகேஷ் பாபு ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் இப்படி மோதிக் கொள்ள என்ன தான் காரணம் என விசாரித்தால், வாரிசு படம் தான் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நேஷனல் ட்ரோல் மெட்டீரியல் விஜய்
#NationalTrollMaterialVijay என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ஏகப்பட்ட கேவலமான வீடியோ மீம்கள் மற்றும் நடிக விஜய்க்கு எதிரான ட்ரோல்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர் மகேஷ் பாபு ரசிகர்கள். மகேஷ் பாபுவின் ஒக்கடு மற்றும் போக்கிரி படங்களை தமிழில் கில்லி மற்றும் போக்கிரி என ரீமேக் செய்து ஹிட் அடித்தவர் விஜய் என்றூம் மகேஷ் பாபுவின் மகரிஷி படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த வம்சியுடன் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார் என்றும் நடிகர் விஜய் ஒரு ரீமேக் ஸ்டார் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

பாய்காட் கே மகேஷ் பாபு
அஜித், ரஜினி, சூர்யா என உள்ளூரிலேயே மூன்று முன்னணி நடிகர்களின் ரசிகர்களுடன் சோலோவாக சண்டை செய்து வரும் விஜய் ரசிகர்கள் மகேஷ் பாபு ரசிகர்களை மட்டும் சும்மா விடுவார்களா? #BoycottGayMaheshBabu என்கிற ஹாஷ்டேக்கை போட்டு ஹாஷ்டேக்கை விட ஆபாசமாக இருக்கும் போட்டோக்களையும் மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

நாறடிக்கிறாங்க
ரசிகர்கள் சண்டையில் தேவையில்லாமல் நல்ல நண்பர்களான விஜய் மற்றும் மகேஷ் பாபு தான் நாறடிக்கப்படுகின்றனர். பெண் வேடம், விக் இல்லாத மண்டை என தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரசிகர்கள் பலம் கொண்ட இரு நடிகர்களையும் அவர்களின் ரசிகர்களே எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தி வருகின்றனர். மகேஷ் பாபு ரசிகர் ஒரு கேவலமான மீம் போட்டால், விஜய் ரசிகர் அதை விட கேவலமான மீமைத் தானே போடுவார்கள் என்பது கூட புரியவில்லை.

பொங்கல் போட்டி இல்லையே
மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா இந்த ஆண்டு வெளியாகி விஜய்யின் பீஸ்ட்டை போலவே விமர்சன ரீதியாக சொதப்பியது. மேலும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மகேஷ் பாபுவின் எந்தவொரு படமும் விஜய் படத்துடன் அங்கே மோதப் போவதில்லை. இந்நிலையில், ஏன் இப்படியொரு சண்டை இரு ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என்று விசாரித்தால், சம்பளம் பிரச்சனை தான் காரணம் என்கிற பேச்சு அடிபடுகிறது.

வாரிசு சம்பளம் தான் காரணமா
திடீரென இப்படியொரு சண்டை எழ என்ன காரணம் என கேள்விகளும் எழுந்துள்ளன. டோலிவுட்டில் இது தொடர்பாக விசாரித்துப் பார்த்தால், மகேஷ் பாபுவே அங்கே இதுவரை அதிகபட்சமாக 80 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறார். வாரிசு படத்துக்கு 118 கோடி வரை விஜய்க்கு சம்பளம் கொடுத்த நிலையில், தான் இப்படியொரு ரசிகர்கள் சண்டை வெடித்துள்ளது எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











