»   »  தாரை தப்பட்டையில் பாலாவுடன் கைகோர்த்த டிஸ்கவரி சேனல்!

தாரை தப்பட்டையில் பாலாவுடன் கைகோர்த்த டிஸ்கவரி சேனல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலாவின் இயக்கத்தில் உருவாகும் தாரை தப்பட்டை படத்தில் டிஸ்கவர் தமிழ் சேனல் குழுவும் ஒரு அங்கமாக இடம்பெற்றுள்ளது.

பாலா இயக்கத்தில், 'தாரை தப்பட்டை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படம் இது.


Discovery Tamil joins with Bala

தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த கரகாட்டக்கார குழுவினரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், பாலாவுடன் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரியமிக்க நடனக் கலைகள் பற்றி ஆய்வு செய்யும் குழுவாக இந்தப் படத்தில் டிஸ்கவரி சேனல் இடம்பெற்றுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் காணாமல் போன பாரம்பரிய கலைகளில் தேர்வு பெற்ற சுவாமி புலவர் என்பவரை, இந்தக் குழு அலைந்து திரிந்து கண்டுபிடிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம்.


இயக்குநர் பாலா இதுபற்றிக் கூறுகையில், "தமிழ் சமூகத்தின் தொன்ம அடையாளமாகத் திகழும் நாட்டுப்புற நடனக் கலைகள் குறித்த தகவல்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தப் படத்தில் டிஸ்கவரி தமிழ் சேனல் இணைந்துள்ளது," என்றார்.

English summary
The Tamil Edition of Discovery Channel has join hands with Bala in Tharai Thappattai movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil