»   »  இங்கயுமாடா செல்பி எடுப்பீங்க... நொந்து ‘நூடுல்ஸ்’ ஆன அமிதாப்!

இங்கயுமாடா செல்பி எடுப்பீங்க... நொந்து ‘நூடுல்ஸ்’ ஆன அமிதாப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இறந்தவரை தகனம் செய்யும் இடத்திலும் சிலர் தன்னுடன் செல்பி எடுத்தது கேவலமான செயல் என நடிகர் அமிதாப்பச்சன் கவலை தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப், சமீபத்தில் தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்தார். அங்கு அமிதாப்பைக் கண்ட சில ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர்.

துக்ககரமான நிகழ்ச்சியில் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், இவ்வாறு நடந்து கொண்டவர்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார் அமிதாப்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உணர்வுகள்...

உணர்வுகள்...

இறந்தவர்களுக்கும், உயிரோடு இருப்பவர்களுக்குமான உணர்வுகளையும் கூட சில நேரங்களில் சரிவர புரிந்து கொள்வதில்லை.

இறுதிச் சடங்கு...

இறுதிச் சடங்கு...

என்னுடைய நெருங்கிய நண்பர் திடீரென மரணமடைந்து விட்டார். அன்னாரது இறுதிச்சடங்கிற்காக நான் டெல்லிக்கு சென்று இருந்தேன்.

அதிருப்தி...

அதிருப்தி...

ஆனால், அங்கேயும் மக்கள் தங்களுடைய மொபைலில் படங்களையும், செல்பி படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தனர். இது எனக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி மரியாதை...

கடைசி மரியாதை...

மரணமடைந்தவர்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை கூட அவர்கள் செலுத்தவில்லை' என இவ்வாறு அதில் அவர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood megastar Amitabh Bachchan says he was disgusted when people around him clicked selfies as he attended the cremation of his friend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil