»   »  'சங்கமித்ரா'வாக நடிக்கும் வாரிசு நடிகரின் காதலி?

'சங்கமித்ரா'வாக நடிக்கும் வாரிசு நடிகரின் காதலி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கமித்ரா படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சுந்தர் சி. இயக்கும் மெகா பட்ஜெட் திரைப்படம் சங்கமித்ரா. இந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் விலகினார்.

இதையடுத்து ஹன்சிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் ஹன்சிகா நடிக்கவில்லையாம்.

திஷா பதானி

திஷா பதானி

சங்கமித்ரா என்னும் இளவரசியாக டோணி படப் புகழ் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி என்று இரண்டு ஹீரோக்கள் உள்ளனர்.

அறிவிப்பு

அறிவிப்பு

சங்கமித்ரா படத்தில் நடிக்க திஷா ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இது திஷாவின் வாழ்நாளில் மறக்க முடியாத கதாபாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

சங்கமித்ரா படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்க உள்ளது. படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

கலகலப்பு 2

கலகலப்பு 2

சங்கமித்ராவுக்கு முன்பு கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் சுந்தர் சி. ஜீவா, ஜெய், கேத்ரீன் தெரஸா உள்ளிட்டோர் நடிக்கும் கலகலப்பு 2 படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

டைகர்

டைகர்

திஷா பதானியும் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபும் காதலிப்பதாக கூறப்படுகிறது. திஷா ஓவராக சம்பளம் கேட்டதால் பிரபாஸின் சாஹோ படத்தில் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை.

English summary
According to reports, Bollywood actress Disha Patani is set to act in Sundar C.'s mega budget movie Sangamithra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil