»   »  வேற பிரேக்கிங் நியூஸே கிடைக்கலையா?: நியூஸ் சேனலை அசிங்கப்படுத்திய 'சங்கமித்ரா'

வேற பிரேக்கிங் நியூஸே கிடைக்கலையா?: நியூஸ் சேனலை அசிங்கப்படுத்திய 'சங்கமித்ரா'

Posted By:
Subscribe to Oneindia Tamil
செய்தி சேனலை விளாசிய நடிகை திஷா பதானி

மும்பை: தான் அசிங்கமாக இருந்ததாக கூறிய செய்தி சேனலை நடிகை திஷா பதானி விளாசியுள்ளார்.

பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க வரும் முன்பு வித்தியாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் முன்னணி செய்தி சேனல் ஒன்று அவரின் பழைய மற்றும் தற்போதைய புகைப்படங்களை ஒப்பிட்டுள்ளது.

அந்த ஒப்பீடு செய்ததை ட்வீட்டியுள்ளது.

புகைப்படம்

புகைப்படம்

திஷா பள்ளியில் படித்தபோது எடுத்த புகைப்படத்துடன் தற்போதைய புகைப்படத்தை ஒப்பிட்டு திஷா பதானி ஒரு காலத்தில் எவ்வளவு அசிங்கமாக இருந்துள்ளார் என்று உங்களால் நம்ப முடிகிறதா என்று ட்வீட்டியுள்ளது அந்த செய்தி சேனல்.

விளாசல்

விளாசல்

செய்தி சேனலின் ட்வீட்டை பார்த்த திஷா பதானிக்கு கோபம் வந்துவிட்டது. இதையடுத்து அவர் செய்தி சேனலை விளாசி பதில் ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரேக்கிங் நியூஸ்

நீங்கள் சொன்னது மிகவும் சரி. நான் 7ம் வகுப்பு படிக்கும்போது அழகான கவுன் அணிந்து, ஹேர்ஸ்டைல் செய்து, மேக்கப் போட்டுக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அசிங்கமான குழந்தையாக இருந்ததற்கு சாரி. இதை விட நல்ல பிரேக்கிங் நியூஸ் கிடைக்கவில்லையா? என்று கேட்டுள்ளார் திஷா.

ஹீரோயின்

ஹீரோயின்

சுந்தர் சி. இயக்கும் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் இளவரசியாக நடிக்க உள்ளார் திஷா பதானி. இந்த படத்தின் மூலம் அவர் கோலிவுட்டுக்கு வருகிறார்.

English summary
A leading news channel posted a collage of Disha Patani during her childhood days Vs today's persona on Twitter, but their caption did not go down well with Disha Patani at all. The caption read, "Can you believe how ugly Disha Patani looked once, see the contrast." A furious Disha, posted the screenshot of the caption and collage and humourelsy trolled the news channel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil