சூர்யாவுக்கு ஜோடி நான் தான்.. அதிரடியாக கன்ஃபார்ம் பண்ண பாலிவுட் நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்!

சென்னை: சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. சமீபத்தில், அந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அதனை அதிகாரப்பூர்வமாக அவரே அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிரம்மாண்ட படத்தில் சூர்யா

பிரம்மாண்ட படத்தில் சூர்யா

பிரபாஸ், ராம்சரண், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ரன்பீர் கபூர் என பலரும் பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் அப்படியொரு வரலாற்று படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். போர்க் காட்சிகள் நிறைந்த ஒரு படத்தை சிறுத்தை சிவா இயக்க போர் வீரனாக வித்தியாச உடையில் நடிகர் சூர்யா இருக்கும் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது.

சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா

கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தை இயக்கிய இயக்குநர் சிவாவை இன்றும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சிறுத்தை சிவா என்று தான் அழைத்து வருகின்றனர். சிறுத்தை படத்துக்கு பிறகு அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களையும் ரஜினியுடன் அண்ணாத்த படத்தையும் அவர் இயக்கி உள்ளார்.

உறுதி செய்த திஷா பதானி

உறுதி செய்த திஷா பதானி

சூர்யா 42 படத்தின் பூஜைக்கு பாலிவுட் நடிகை திஷா பதானி வருகை தரவில்லை போல தெரிகிறது. படக்குழு வெளியிட்ட பூஜை போட்டோக்களில் இயக்குநர் சிறுத்தை சிவா, சூர்யா, தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் தான் இருந்தனர். இந்நிலையில், இன்று மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், நடிகை திஷா பதானியே தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த படத்தின் மோஷன் போஸ்டரை ஷேர் செய்து படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

பாலிவுட்டின் ஹாட் பாம்ப்ஷெல் நடிகையான திஷாபதானி சர்வ சாதாரணமாக உள்ளாடைகளுடன் போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று பீச்சில் வெள்ளை நிற பிகினி உடையில் காட்டுத் தனமாக கவர்ச்சியை காட்டி நிற்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். கோவா பீச்சில் எடுக்கப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வியை எழுப்பி இருந்தனர். ஏனென்றால் தற்போது அங்கே தான் சூர்யா 42 பட ஷூட் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X