»   »  கடல் படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்!

கடல் படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kadal Movie
சென்னை: மணிரத்னம் இயக்கி வெளியிட்ட கடல் படத்தால் ரூ 17 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் விநியோகஸ்தர் புகார் கொடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய 'கடல்' படம் கடந்த 1-ந்தேதி ரிலீசானது. இதில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் அறிமுகமாகியுள்ளனர்.

இந்த படத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் புகார் கூறினார். மணிரத்னம் அலுவலகத்திலும் முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்.

இன்று காலை விநியோகஸ்தர் மன்னன் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில், "'கடல்' படத்தை வாங்கி விநியோகிப்பதற்கு முன்பு அதனை திரையிட்டு காட்டும்படி கோரினேன். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காண்பிக்க இயலாது என மணிரத்னம் மானேஜர் கூறிவிட்டார். மணிரத்னத்துக்காக படம் ஓடும் என்று நம்பி வாங்கலாம் என்று கிருஷ்ணா என்னிடம் கூறினார்.

இதனால் ரூ.20 கோடி கொடுத்து 'கடல்' படத்தை வாங்கினேன். ஆனால் ரூ.3 கோடிதான் கிடைத்தது. மணிரத்னத்தை சந்தித்து நஷ்டம் பற்றி முறையிட பலதடவை முயற்சித்தோம். ஆனால் சந்திக்க முடியவில்லை. கிருஷ்ணா மிரட்டுகிறார். எனவே தொகையை வாங்கித்தர வேண்டும். கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
A Distributor has filed complaint on director Manirathnam for his loss of Rs 17 cr by distributing Kadal movie.
Please Wait while comments are loading...