கொரோனா காலத்தில் காப்பாற்றிய விஜய்யை மறந்து விமர்சிப்பதா?...விநியோகஸ்தர் கோபம்

சென்னை : பீஸ்ட் படம் கடுமையாக விமர்சித்து வருபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல வினியோகஸ்தர் கே.ராஜமன்னார் கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் படம் பலருக்கும் ஏமாற்றமளித்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரும் படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதே சமயம் விஜய்க்கு ஆதரவாக சிலரும், நடுநிலையாக சிலரும் நியாயமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

விநியோகஸ்தர் அறிக்கை

விநியோகஸ்தர் அறிக்கை

அப்படி வினியோகஸ்தர் கே.ராஜமன்னார் கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக சில தொலைக்காட்சி விவாதங்கள், யூ ட்யூப் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பீஸ்ட் படத்தையும், நடிகர் விஜய் பற்றியது மட்டம் தட்டும் விதமாக சில திரையரங்க உரிமையாளர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றார்கள்.

பீஸ்ட் படத்தால் லாபம் தான்

பீஸ்ட் படத்தால் லாபம் தான்

கேஜிஎஃப் 2 என்பது சினிமாவில் அரிதாக வரும் ஒரு பிரம்மாண்ட படைப்பு மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயம் பீஸ்ட் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் செய்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் எந்த தியேட்டருக்கு MG அடிப்படையில் படத்தை திரையிடவில்லை, யாருக்கும் நஷ்டம் ஏற்படவும் இல்லை, 2022ல் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் பீஸ்ட் என்பதே நிதர்சனமான உண்மை, நடிகர் விஜய் படத்தை திரையிட்ட அனைத்து திரையரங்குகளுமே பெரிய லாபம் அடைந்துள்ளனர்.

தியேட்டர்களுக்கு வாழ்வு தந்தவர்

தியேட்டர்களுக்கு வாழ்வு தந்தவர்

கொரோனா காலத்தில் அனைத்து திரையரங்குகள் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் பாதிக்கப்பட்டு இருந்து போது ஓடிடி.,யில் படத்தை திரையிடாமல் அந்த கடுமையான கொரோனா சூழலிலும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு கொண்டு வர காரணம் நடிகர் விஜய். அன்று அவரை திரையரங்குகளுக்கு வாழ்வு தந்த விஜய் என்று புகழ்ந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே பீஸ்ட் படத்தை பற்றி எதிர்மறை கருத்துக்களை பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நன்றி மறக்கக் கூடாது

நன்றி மறக்கக் கூடாது

அனைத்து படங்களையுமே மிக நேர்த்தியாகவும், மாபெரும் வெற்றி படமாக எந்த நடிகராலும் தரமுடியாது சில படங்களில் குறைகள் இருக்கத்தான் செய்யும் அதை ரசிகர்கள் விமர்சிக்கலாம் ஆனால் அந்த நடிகர் படம் மூலமும் லாபம் அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று அவர்களையே ஏளனம் செய்வது மிகவும் தவறான செயல்...நன்றி மறப்பது நன்றன்று" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேடையில் விளாசிய ஆரி

மேடையில் விளாசிய ஆரி

இதே கருத்தை வலியுறுத்தி பிக்பாஸ் ஆரியும் மேடை ஒன்றில் பேசி உள்ளார். அவர் பேசுகையில், குறைகளை திருத்தி கொள்வதற்காக விமர்சனம் செய்யுங்கள். ஒரு படத்தை பேசி பேசியே அழித்து விடாதீர்கள். பான் இந்தியன் படமாக எடுத்து, கேஜிஎஃப் 2 கோடிகளில் வசூலிப்பது பெரிய விஷயமில்லை. அதற்கு முன்பாகவே தமிழ் படங்கள் கோடிகளில் வசூலை பார்த்து வருகின்றன. சினிமாவை வாழ்த்துபவர்களும் சரி, விமர்சிப்பவர்களும் சரி சினிமாவை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறோம் என்பதை மறந்து விட வேண்டாம் என கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X