»   »  விஜய்யின் புலியால் போக்கிரி ராஜாவுக்கு விழுந்தது தடை?

விஜய்யின் புலியால் போக்கிரி ராஜாவுக்கு விழுந்தது தடை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் புலி படத்தால் ஜீவாவின் போக்கிரி ராஜாவுக்கு விநியோகஸ்தர்கள் தடை விதித்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் போக்கிரி ராஜா. காதலர் தினத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின.


Distributor's Banned Jeeva's Pokkiri Raja

தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 26 ம் தேதி இப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென்று விஜய்யின் புலி படத்தால் போக்கிரி ராஜா படத்திற்கு விநியோகஸ்தர்கள் தடை விதித்ததாக செய்திகள் வெளியாகின.


விஜய்யின் புலி படத்தால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்கள், புலி படத்திற்கு நஷ்டஈடு தராவிடில் போக்கிரிராஜாவை வெளியிட மாட்டோம் என்று சொன்னதாகவும் கூறப்பட்டது.


ஆனால் போக்கிரிராஜா தயாரிப்பாளர் பிடி.செல்வக்குமார் "இதுபற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் 4 ம் தேதி வெளியிடவுள்ளோம்" என்று தெரிவித்திருக்கிறார்.


அப்படியானால் இந்த வதந்தி எதனால் பரவியது என்று விசாரித்தால், போக்கிரி ராஜா குழுவினர் இப்படத்தை முதலில் பிப்ரவரி 26 ம் தேதி தான் வெளியிடத் திட்டமிட்டிருந்தனராம்.


அந்தத் தேதியில் வேறு படங்கள் வெளியாவதால் போக்கிரி ராஜாவைத் தள்ளி வைக்கும்படி விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.


இந்தக் கோரிக்கையை படக்குழு நிராகரித்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இப்படி ஒரு செய்தியை பரப்பி விட்டார்கள் என்று கூறுகின்றனர்.


தற்போது வினியோகஸ்தர்களின் ஆசைப்படி பிப்ரவரி 26 க்குப் பதில் மார்ச் 4 ல் போக்கிரிராஜா வெளியாவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Film Distributors Banned Jeeva's Pokkiri Raja but Producer PT.Selvakumar Denied the Rumors.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos