»   »  தோல்வியை மறைக்க விக்கிக்கு கார் பரிசு.. சூர்யா மீது கோபத்தில் விநியோகஸ்தர்கள்!

தோல்வியை மறைக்க விக்கிக்கு கார் பரிசு.. சூர்யா மீது கோபத்தில் விநியோகஸ்தர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காரை பரிசளித்த சூர்யா! ஏன்? எதற்கு?- வீடியோ

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கலுக்கு வெளிவந்தது.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு, சூர்யா கார் பரிசளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் தோல்வியை மறைப்பதற்காகவும், இமேஜைக் காப்பாற்றிக்கொள்ளவும் சூர்யா இப்படி நடந்து கொள்கிறார் என விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெரிய வெற்றி பெறவில்லை

பெரிய வெற்றி பெறவில்லை

இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்று கூட அனைவருக்கும் லாபகரமான படமாக அமையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால், சில படங்கள் வெற்றி பெற்றதாக விளம்பரங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கலுக்கு வெளிவந்தது. இந்தியில் வெற்றி பெற்ற 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை சுவாரஸ்யமாக கொடுக்கத் தவறியதால் படம் வெற்றி பெறவில்லை.

கார் பரிசளித்த சூர்யா

கார் பரிசளித்த சூர்யா

நேற்று 'TSK' படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கார் பரிசளித்திருக்கிறார். இது விநியோகஸ்தர்கள் தரப்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சில நாட்களுக்கு முன்பு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வசூல் பற்றி ட்விட்டரில் பகிர்ந்தவர்கள் மீது கோபமாகப் பதிவிட்டார் விக்னேஷ் சிவன்.

விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி

விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி

'TSK' படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களே படம் 15 கோடி ரூபாய் நஷ்டம் என அறிவித்துள்ளனர். அவர்கள் சூர்யாவை சந்தித்து நஷ்ட ஈடு கேட்கலாம் என்று இருந்தார்களாம். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, சூர்யா கார் பரிசளித்திருப்பது வினியோகஸ்தர்களை கோபம் கொள்ள வைத்துள்ளது.

தோல்வியை மறைக்க

தோல்வியை மறைக்க

'TSK' படம் நஷ்டம் என்று தெரிந்தும் சூர்யா, அவருடைய தோல்வியை மறைப்பதற்காகவும், இமேஜைக் காப்பாற்றிக் கொள்ளவும் இப்படி நடந்து கொள்கிறார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் திரையுலகில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

English summary
Suriya gifted a car to Vignesh Sivan, who directed the movie 'TSK'. It's became controversial now. Distributors have alleged that Surya is doing this to hide the film's defeat and save his image.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X