»   »  ரூ.100 கோடி எல்லாம் புருடா: விஜய், சூர்யாவுக்கு வருகிறது தடை?

ரூ.100 கோடி எல்லாம் புருடா: விஜய், சூர்யாவுக்கு வருகிறது தடை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து தோல்விப் படங்களாக அளிக்கிறார்கள் என்று கூறி விஜய் மற்றும் சூர்யாவுக்கு தடை விதிக்க தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாம்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான புலி படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு வெளியான தெறி ஓடினாலும் பைரவா படம் ஓடவில்லை என்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

இதே போன்று சூர்யாவின் 24, சிங்கம் 3 படங்களாலும் நஷ்டமே என்று வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

பைரவா படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியதே என்று கேட்டால் அது ஹீரோவின் இமேஜை காப்பாற்ற தயாரிப்பாளரும், ஹீரோவும் சேர்ந்து விட்ட புருடா என்று வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சூர்யா

சூர்யா

சூர்யாவின் சிங்கம் 3 வெளியான ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் அவரின் இமேஜ் டேமேஜ் ஆகாமல் இருக்கத் தான் என்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

தடை

தடை

அண்மை காலமாக விஜய், சூர்யா படங்களால் தங்களுக்கு நஷ்டமே என்று வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் மற்றும் சூர்யாவுக்கு தடை விதிக்க தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாம்.

லாபம் எங்கே?

லாபம் எங்கே?

நஷ்டம், நஷ்டம் என்று தற்போது சொல்கிறார்களே, படத்தை வினியோகித்து சுத்தமாகவா லாபம் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Tamil Nadu film distributors association has decided to give red card to actors Vijay and Suriya for giving flop movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil