»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் நடிகர் ராமராஜன் மற்றும் நளினிக்கு வரும் 30 ம் தேதி விவாகரத்து கிடைக்கும் என்றுதெரிகிறது.

தமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்த நடிகர் ராமராஜனும், நடிகை நளினியும் 1987 ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்குஅருண், அருணா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் இரட்டைக் குழந்தைகள். தற்போது 10 ம் வகுப்புப் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நளினியும், ராமராஜனும் கடந்த ஆண்டு விவாகரத்து வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் தனது இரண்டுகுழந்தைகள் பெயரிலும் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக ராமராஜன் தெரிவித்தார்.

6 மாதம் பிரிந்திருந்து ஜனவரி மாதம் 18 ம் தேதி விவாகரத்துக் கோரினால் விவாகரத்து அளிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால்கோர்ட்டில் உறுதியளித்தபடி, ராமராஜன் தனது குழந்தைகள் பெயரில் பணம் எதையும் டெபாசிட் செய்யவில்லை. மேலும் நீதிபதி கோரியகாலக்கெடுவும் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.

இந்தநிலையில், வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. நளினி தனது இரண்டு குழந்தைகளுடனும், ராமராஜனும் தனித் தனியாகநீதிமன்றத்துக்கு வந்தனர்.

பின்னர், முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சவுந்தர்ராஜனின் தனியறையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ராமராஜன் அளித்த வாக்குமூலத்தில்,நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சீறி வரும் காளை படம் ரிலீஸானதும் நளினிக்கு ரூ 7 லட்சத்தை ஜீவனாம்சமாகக் கொடுக்கிறேன்.

பிப்ரவரி மாதத்துக்குள் மதுரையில் உள்ள எனது தியேட்டரை விற்று குழந்தைகள் பெயரில் பணம் டெபாசிட் செய்கிறேன். எனக்கு விவாகரத்துவழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

நளினி கொடுத்த வாக்குமூலத்தில், குழந்தைகள் இருவரும் எனது பொறுப்பில்தான் இருக்க வேண்டும். ராமராஜன் விரும்பினால் வாரம் ஒரு முறை வந்துகுழந்தைகளைப் பார்த்துக் கொள்ளட்டும் என்றார்.

இருவரது கருத்துக்களையும் கேட்ட நீதிபதி, உங்கள் குழந்தைகள் இருவரும் பெரியவர்களாகி விட்டார்கள். விவாகரத்து வேண்டுமா என்பதை நீங்கள்யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள். 12 நாட்கள் இறுதி அவகாசம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

நளினியும், ராமராஜனும் விவாகத்து பெறுவதில் பிடிவாதமாக இருப்பதால், இருவருக்கும் 30-ம் தேதிய விவாகரத்து அளிக்கப்பட்டு விடும் என்றுதெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil