டைவர்ஸ் தீபாவளி.. பிடிக்கலையா பிரிந்து சந்தோஷமா வாழ்வோம்.. சோகமா ஏன் இருக்கணும்னு நிரூபித்த பிரபலங்கள்!
சென்னை: இந்த ஆண்டு தீபாவளி கிட்டத்தட்ட சில பிரபலங்களுக்கு ஹேப்பி டைவர்ஸ் தீபாவளியாகவே மாறியுள்ளது. சினிமா பிரபலங்களின் தல தீபாவளி கொண்டாட்டம் ஒரு பக்கம் அரங்கேற காலத்தின் கட்டாயத்தால் ஏற்பட்ட பிரிவு காரணமாக சில பிரபலங்கள் தனித்தனியாக சோகமாக தீபாவளி அன்று அமைதியாக இல்லாமல், தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களும் வீடியோக்களு வெளியாகி வரும் நிலையில், ரசிகர்களுக்கு புதிய பாடத்தையும் அவர்கள் அவர்களுக்கே தெரியாமல் கற்றுக் கொடுத்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
பூவே உனக்காக படத்தில் காதலி கிடைக்கவில்லை என்றால் கடைசி வரை அவளது நினைவுகளுடனே வாழ்ந்து விட வேண்டும் என்பது போல கிளைமேக்ஸ் அமைந்திருக்கும். அந்த ஜெனரேஷன் அதை விரும்பிய நிலையில், அந்த படம் வெற்றிப் பெற்றது.

ஆனால், இந்த 2025ம் ஆண்டு டியூட் படம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்துள்ள நிலையில், பிரபலங்களின் மன நிலையும் சாமானிய மக்களின் மன நிலையும் இன்றைய இளைய தலைமுறையினரின் மன நிலையும் ரொம்பவே மாறியுள்ளதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
தியாகம் தான் உன்னை உயர்த்தும்: காதல் வளர்த்தேன் என வாழ்வதும், காதலி கிடைக்கவில்லை என உயிரை மாய்த்துக் கொள்வதும் அந்தக் காலம். தியாகம் தான் உன்னை உயர்த்தும் என்று சொல்வதை எல்லாம் கடந்து விட்டு, என் வாழ்க்கை ஹேப்பியா இருக்கணும், உனக்கு நான் பாரமா இருக்கக் கூடாது, எனக்கு நீயூம் பாரமா இருக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வருவதற்கான பக்குவத்துடன் பிரபலங்கள் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து குழந்தைகள் எல்லாம் இருக்கும் நிலையிலும் பிரிந்து புதிய துணையை தேடுகின்றனர். தொழிலில் அதிக கவனத்தை செலுத்துகின்றனர் என மாறியுள்ளனர்.
விவாகரத்தான பிரபலங்கள்: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமந்தா - நாக சைதன்யா, ஜி.வி. பிரகாஷ் குமார் - சைந்தவி மற்றும் ரவி மோகன் - ஆர்த்தி ரவி என ஏகப்பட்ட பிரபலங்கள் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்து செய்தது தமிழ் சினிமா ரசிகர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் எல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட இருவரையும் ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தியிருக்கும். ஆனால், அதை கடந்து செல்வது தான் வாழ்க்கை என்பதை அந்த பிரபலங்கள் நன்றாகவே புரிந்துக் கொண்டனர் என்பதை தான் இந்த தீபாவளி உணர்த்துகிறது.
ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தீபாவளி: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தனது மகள் அன்வியுடன் இந்த தீபாவளியை கொண்டாடினார். விவாகரத்து பெற்று பிரிந்த சைந்தவியும் தனியாக தனது மகளுடன் ஜாலியாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தீபாவளி: நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பா, அம்மா, தங்கையுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
சமந்தா தீபாவளி: கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு தனியாக மும்பையில் வாழ்ந்து வரும் நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். பட்டாசு வெடித்து ரொம்பவே ஹேப்பியாக சமந்தா தீபாவளி கொண்டாடியதை பார்த்த ரசிகர்கள் அவர் ஹேப்பியாக இருப்பதை பார்த்து ரசித்தனர்.
தலை தீபாவளி கொண்டாடிய நாக சைதன்யா: நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த முறை தனது தலை தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினார். அதன் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கின.
ரவி மோகன் - ஆர்த்தி தீபாவளி: அதே போலத்தான் ரவி மோகன் கெனிஷாவுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஹேப்பியாக இருந்தார். மேலும், குஷ்பு மற்றும் குஷ்பு மகள்களுடன் ஆர்த்தி ரவி துபாய்க்கு டூர் சென்று அங்கே தனது மகன்களுடன் சந்தோஷமாக விடுமுறையை கொண்டாடினார். இருக்கும் ஒரு வாழ்க்கையை இருக்கும் வரை ஹேப்பியாக கொண்டாட வேண்டும் என்கிற நிலைக்கு இந்த பிரபலங்கள் சென்றுவிட்டனர். பிடிக்காத வாழ்க்கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு கடைசி வரை அழுது சாவதை விட மூவ் ஆன் செய்வதில் எந்த தவறும் இல்லை.


Click it and Unblock the Notifications











