»   »  ரேஷ்மி மேனனுடன் விவாகரத்தா.. மனம் திறந்த பாபி சிம்ஹா

ரேஷ்மி மேனனுடன் விவாகரத்தா.. மனம் திறந்த பாபி சிம்ஹா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தானும், நடிகை ரேஷ்மி மேனனும் விவாகரத்துக்கு ரெடியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்திகளை பார்த்த நடிகர் பாபி சிம்ஹா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை அமலா பால் தனது காதல் கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்துவிட்டார். சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஷ்வினை பிரிந்து வாழ்கிறார்.

இது என்னடா கோலிவுட்டில் அடுத்தடுத்து பிரிவுகளாக உள்ளதே என்று நினைக்கும்போது மேலும் ஒரு விவாகரத்து செய்தி வெளியானது.

பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா உறுமீன் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தார் முன்னிலையில் திருப்பதியில் திருமணம் நடந்தது.

விவாகரத்து

விவாகரத்து

திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனனும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. திருமணமான வேகத்தில் மனைவியை பிரிகிறாரே சிம்ஹா என்று பேசப்பட்டது.

போதை

போதை

பாபி சிம்ஹா எப்பொழுதும் குடிபோதையில் இருப்பதாகவும், வீட்டிற்கே செல்வது இல்லை என்றும் கூறப்பட்டது. சொந்தப் பட முயற்சியும் தேறாது என்று தெரிய வந்ததால் சிம்ஹாவுக்கும், ரேஷ்மிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிவு வரை வந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இல்லைங்க

இல்லைங்க

வதந்திகள் குறித்து கருத்து கூறவில்லை. அதை நினைத்து கவலைப்பட்டு எங்களுக்கு போன் செய்பவர்களுக்காக கூறுவது இது தான், நாங்கள் சந்தோஷமாக உள்ளோம். தற்போது நாங்கள் பிரிப்பது பீட்சாவை தான் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சிம்ஹா.

English summary
Bobby Simha has given explanation about the rumour about him splitting with his wife Reshmi Menon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos