»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ராமராஜனுக்கும் அவரது மனைவி நளினிக்கும் விவாகரத்து கிடைப்பதில் சிக்கல்ஏற்படும் நிலை உள்ளது.

இயக்குனரும், நடிகருமான ராமராஜன், நடிகை நளினியை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துகோரி மனு செய்தனர். இருவரும், தாங்கள் பிரிந்து வாழ விரும்புவதாக அந்த மனுவில்தெரிவித்திருந்தனர். அப்போது, ராமராஜன் தனது இரு குழந்தைகள் பேரிலும் தலா ரூ 10லட்சம் டெபாசிட் செய்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இருவரும் 6 மாத காலம் பிரிந்து வாழ வேண்டும். அதன் பிறகும் அவர்கள்விவாகரத்து கோரினால் விவாகரத்து வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி கொடுத்த 6 மாத கெடு ஜனவரி மாதம் முடிவடைகிறது. ஆனால் ராமராஜன் இதுவரை தான் கூறியபடி பணம் டெபாசிட் செய்யவில்லை. விவாகரத்து விதிமுறைகள் படிவிவாகரத்துக்கு மனு செய்பவர்கள் 6 மாத காலம் பிரிந்திருக்க வேண்டும். மேலும்விவாகரத்துக்கு மனு செய்த போது அளித்த உத்திரவாதங்களையும் நிறைவேற்றவேண்டும்.

அதன்படி ராமராஜன் டெபாசிட் செய்வதாக சொன்ன பணத்தை டெபாசிட்செய்யாவிட்டால் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைக்குமா என்ற ஐயம்எழுந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil