Divya Sathyaraj: பயந்து ஓடுபவன் தலைவன் இல்லை.. விஜய்யை சீண்டிய சத்யராஜ் மகள்!
சென்னை: கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். கூட்டம் நடத்தப்பட்ட இடத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதுடன், அதிகமான மக்கள் திரண்டு கட்டுப்பாடின்றி நுழைந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும் என அதிகாரப்பூர்வ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மேலும், ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதியழகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் முன்ஜாமின் கேட்டுள்ளனர்.

பயந்து ஓடுபவன் தலைவன் இல்ல: இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகளும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளரானுமான திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விஜய் சாரின் பாடிகார்ட்ஸ்க்கு ஒரு சிறிய வேண்டுகோளை வைக்கிறேன். ஒரு பழைய வீடியோவில் உங்கள் பாடிகார்ட்ஸ் தொண்டர் ஒருவரை, வானில் இருந்து தூக்கி வீசுவதை பார்த்தேன். அந்தப் பையனுக்கு கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் அடிபட்டு இருந்தாலோ, தலையில் அடிபட்டு இருந்தாலோ, அவர் கோமாவிற்கு போயிருந்தாலோ அவரின் வாழ்க்கையே போய் இருக்கும். உங்கள் தொண்டர்களை பார்த்து பயப்படாதீர்கள் அவர்களை தூக்கி வீசாதீர்கள்... தொண்டர்களைப் பார்த்து பயம் கொள்பவர் உண்மையான தலைவன் இல்லை... தொண்டர்களுக்கு பாதுகாப்பு தருபவர் தான் உண்மையான தலைவன். மக்களை ஆள வேண்டும் என நினைப்பவர் உண்மையான தலைவன் கிடையாது, மக்களுக்காக பல வருடமாக வாழ்பவர் தான் உண்மையான தலைவர் என விஜய்யை சீண்டுவகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகன் ஆதரவு: கரூர் சம்பவம் குறித்து சத்யராஜின் மகள் விஜய்யை கடுமையா சீண்டி வீடியோ வெளியிட்டு இருக்கும் நிலையில், சத்யராஜின் மகனான சிபி ராஜ் தனது இன்ஸ்டாவின் ஸ்டோரியில் குஷி படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சிதான் பதிவிட்டுள்ளர். அதில் விஜய், "என்னை மட்டுமல்ல, என் இமேஜ்-ஐ கூட உங்களால ஒன்னும் பண்ண முடியாது என்று அவர் வில்லனிடம் ஸ்கிரீனில் பேசும் வீடியோதான் அது. சத்யராஜின் மகள் விஜய்யை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் மகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











