»   »  அமலா பாலை அடுத்து நடிகை திவ்யா உன்னியும் கணவரை பிரிந்தார்?

அமலா பாலை அடுத்து நடிகை திவ்யா உன்னியும் கணவரை பிரிந்தார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: மலையாள நடிகை திவ்யா உன்னி தனது கணவரை பிரிந்து வாழ்கிறாராம்.

சபாஷ் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை திவ்யா உன்னி. அவர் முறைப்படி பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி கற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Divya Unni, hubby head toward splitsville?

அவர் கடந்த 2002ம் ஆண்டு டாக்டர் சுதிர் சேகரனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் திவ்யா உன்னி கணவரை பிரிந்து அமெரிக்காவில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊரான கொச்சிக்கு வந்து செட்டிலாகிவிட்டாராம். அமெரிக்காவில் நடனப் பள்ளி நடத்தி வந்த அவர் தற்போது கொச்சியில் நடனம் கற்றுக் கொடுக்கிறாராம்.

கேரளாவை சேர்ந்த நடிகை அமலா பால் தனது கணவரை பிரிந்துள்ள நிலையில் மற்றொரு நடிகையும் கணவரை பிரிந்துள்ளார்.

English summary
Actress Divya Unni has reportedly got separated from her doctor husband.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil