»   »  டாக்டரை பிரிந்த நடிகை திவ்யா உன்னி என்ஜினியரை மணந்தார்

டாக்டரை பிரிந்த நடிகை திவ்யா உன்னி என்ஜினியரை மணந்தார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
திவ்யா உன்னி இரண்டாம் கல்யாணம்.

டெக்சாஸ்: நடிகை திவ்யா உன்னி அருண் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. அவர் கடந்த 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

அவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

பிரிவு

பிரிவு

திவ்யா உன்னி அமெரிக்காவில் நடனப் பள்ளி நடத்தியது சுதீருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து பெற்றனர். திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து பிரிந்தனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

சிறிது காலம் கேரளாவில் இருந்த திவ்யா பின்னர் குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றார். டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் அவர் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

அருண் குமார்

அருண் குமார்

திவ்யா உன்னிக்கும், டெக்சாஸில் பணியாற்றும் அருண் குமார் என்பவருக்கும் ஹூஸ்டனில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார் மட்டும் கலந்து கொண்டனர்.

வேலை

வேலை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண் குமார் ஒரு என்ஜினியர். மும்பையில் வசித்த அவர் பின்னர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்கு சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

English summary
Actress Divya Unni has got married to an engineer named Arun Kumar at Sree Guruvayoorappan temple in Houston, USA. Divya and her first husband got divorced after he asked her to stay away from her dance school.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil