Dude Vs Bison Vs Diesel Box Office Day 2: பட்டாசாக வெடிக்கும் தீபாவளி வசூல்.. எந்த படம் முதலிடம்?

சென்னை: இந்த ஆண்டு தீபாவளி நாளை என்றாலும், அதாவது அக்டோபர் 20ஆம் தேதி என்றாலும், தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாட்கள், அதன் பின்னர் தீபாவளி விடுமுறை நாட்கள் என இந்த வாரம் முழுவதும் கொண்ட்டாட்டமாகத்தான் இருக்கும். வழக்கமாக அபிமான ரசிகர்களைக் கடந்த இது போன்ற விழாக்களில் தான் குடும்ப ரசிகர்கள் இயல்பாகவே தியேட்டர்களுக்கு வருவார்கள். இப்படி இருக்கும்போது, இந்த முறை தீபாவளிக்கு தமிழில் ரிலீஸ் ஆன படங்களான டியூட், பைசன் மற்றும் டீசல் என மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும், வசூலையும் குவித்து வருகிறது. இரண்டாவது நாளில் இந்த மூன்று படங்களும் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

டியூட் படத்தைப் பொறுத்தவரையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான படம். தமிழ்நாட்டில் ஏ.ஜி.எஸ் நிறுவனமும், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மைத்ரி நிறுவனமுமே வெளியிட்டது. படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், டிராவிட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 22 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் இந்தியாவில் மட்டும் படம் ரூபாய் 10 கோடிகள் வரை வசூலித்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதேபோல் இரண்டாவது நாளிலும் படம் ரூபாய் 10 கோடிகளை இந்தியாவில் மட்டும் வசூலித்துள்ளதாக சாக்.நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.

Diwali 2025 Release Tamil Movies Dude Vs Bison Vs Diesel Box Office Day 2 Comparison

பைசன்: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் - காள மாடன். பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் துருவ் விக்ரம், ரஜீஷா, அனுபமா பரமேஸ்வரன், லால், அமீர், மதன், பசுபதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ளது. இந்த படம் அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேஷனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த படம் இரண்டு நாளில் சுமார் 5.68 கோடிகள் இந்தியாவில் வசூலித்துள்ளதாக சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.

Diwali 2025 Release Tamil Movies Dude Vs Bison Vs Diesel Box Office Day 2 Comparison

டீசல்: அதேபோல் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவான படமான டீசல் படம் குறைந்த அளவிலான காட்சிகளே தமிழ்நாட்டில் கிடைத்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் படத்தை தொடர்ந்து பாராட்டி வருவதால் படத்தின் காட்சிகள் வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது படம் முதல் இரண்டு நாட்களில், சுமார் 50 லட்சங்கள் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. படம் மேலும் வசூல் அதிகரிக்கும் என்பதால் படக்குழு நம்பிக்கையில் உள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களில் பாக்ஸ் ஆபீஸில் முதல் இரண்டு நாட்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்றால் அது, டியூட், அதற்கு அடுத்த இடத்தில் பைசன் படமும் மூன்றாவது இடத்தில் டீசல் படமும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X