»   »  தூங்காவனம், வேதாளம், இஞ்சி முரப்பா.. இந்தத் தீபாவளி யாருக்குச் சொந்தம்?

தூங்காவனம், வேதாளம், இஞ்சி முரப்பா.. இந்தத் தீபாவளி யாருக்குச் சொந்தம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை தீபாவளி தினத்தில் வேதாளம், தூங்காவனம் போன்ற பெரிய படங்களுடன் இஞ்சி முரப்பா என்ற சிறு பட்ஜெட் படமும் வெளியாகிறது.

இதுநாள்வரை 2 பேரின் மோதலாக இருந்த இந்தத் தீபாவளியானது தற்போது மும்முனைப் போட்டியாக மாறியிருக்கிறது. 2 பெரிய படங்களுடன் துணிச்சலாக தங்களது படத்தையும் களமிறக்கும் இஞ்சி முரப்பா குழுவினரின் மன தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


இந்நிலையில் இந்தத் தீபாவளி யாருக்கு சொந்தம் என்பதை இங்கே பார்க்கலாம்.


தூங்காவனம்

தூங்காவனம்

ஸ்லீப்லெஸ் நைட் என்ற பிரெஞ்சுப் படத்தின் தழுவல் என்று கூறினாலும் இதைப் பற்றிய அதிகார அறிவிப்பு எதுவும் இதுவரை படக்குழுவினரிடம் இருந்து வெளியாகவில்லை. கமல், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷா சரத், மது ஷாலினி, கிஷோர், சம்பத் என்று மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இணைந்து கமல் இறங்கியிருக்கும் படமே தூங்காவனம். கமலின் நீண்ட நாள் உதவியாளர் ராஜேஷ்.எம் செல்வா இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.


படத்தின் கதை என்ன

படத்தின் கதை என்ன

இப்படத்தின் கதை இதுதான் என்று கிடைத்த தகவலை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் திவாகர் என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல். மனைவியைப் பிரிந்து தனது 14 வயது மகனுடன் வாழ்கிறார். எதிர்பாராமல் அவரிடம் சிக்குகிறது பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பை ஒன்று. அதைத் தனது அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று முதல் தகவல் அறிக்கையைத் தயார்செய்யத் தனது இருக்கையில் அமரும்போது ஒரு போன்.


போதை மருந்துப் பையைக் கொடுத்துவிட்டு மகனை அழைத்துச் செல்லும்படி நட்சத்திர ஹோட்டலும் நைட் கிளப்பும் நடத்தும் ஊரின் மாஃபியா மனிதர் சொல்ல, போதை மருந்துப் பையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.இதற்கிடையில் கமலின் டிபார்ட்மெண்டிலிருந்து அவரது நடவடிக்கையைக் கண்காணிக்கக் கிளம்புகிறது ஒரு குழு. கமல் போதை மருந்துப் பையைக் கொடுத்து மகனை மீட்டாரா, இல்லையா? தன்னை மோப்பம் பிடிக்கக் கிளம்பிய தனது துறையின் சகாக்களிடம் கையும் களவுமாகச் சிக்கினாரா? ஆகிய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக விரிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறது தூங்காவனம்.அதிரடி ஆக்க்ஷன் காட்சிகள்

அதிரடி ஆக்க்ஷன் காட்சிகள்

படத்தில் அதிரடியான பல ஆக்க்ஷன் காட்சிகள் இருக்கின்றன, இது கண்டிப்பாக கமல் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே வெளியான படத்தின் 2 டிரெய்லர்களும் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் கமல் ரசிகர்கள்.


வேதாளம்

வேதாளம்

அஜீத், ஸ்ருதி ஹாசன்,சூரி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வேதாளம். இந்தப் படத்தின் கதை இதுதான் என்று கூறுகின்றனர் அதாவது தன் தங்கை லட்சுமி மேனனுடன் கொல்கத்தாவில் வசிக்கிறார் அமைதியான அஜித். ஆனால் பழைய எதிரிகள் அஜித்தின் தங்கையைக் கடத்தி அவரைச் சீண்டுகிறார்கள். பொறுமை இழக்கும் அஜித் தனது பழைய முகத்தைக் காட்டுகிறார். இறுதியில் தனது எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் வேதாளத்தின் கதை என்கிறார்கள். அஜீத் - சிவா 2 வது முறையாக இணைந்திருப்பதால் அஜீத் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.


எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அஸ்வின் இந்தப் படத்தில் அஜீத்தின் நண்பர் மற்றும் அவரைக் காட்டிக் கொடுக்கும் துரோகி என்று வித்தியாசமாக நடித்திருக்கிறார். மேலும் அண்ணன் - தங்கை பாசம், அனிருத் இசை, அஜீத்தின் நடிப்பு ஆகியவை படத்தின் மீதான அதிகப்படியான எதிர்பார்ப்புகளுக்கு காரணமாக இருக்கிறது.


இஞ்சி முரப்பா

இஞ்சி முரப்பா

இதுவும் ஒரு அண்ணன் தங்கை பாசத்தைப் பற்றிய கதைதான் என்கிறார்கள். எஸ். ஏ. சந்திரசேகரின் உதவியாளரான எஸ். சகா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி சோனி சிறிஷ்டா என்ற மற்றொரு புதுமுகம்.தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணன், அவளது அனுமதியில்லால் காதலில் விழுந்தால் அந்தக் காதலுக்கு வரும் புது மாதிரியான சோதனையை நகைச்சுவையுடன் சொல்லும் படமே இஞ்சி முரப்பா. 2 பெரிய படங்கள் வெளியானாலும் துணிச்சலாக படத்தை வெளியிடுகின்றனர் இஞ்சி முரப்பா குழுவினர்.


மெய்மறந்தேன் பாராயோ

மெய்மறந்தேன் பாராயோ

இந்த மூன்று நேரடித் தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் சல்மான் கான் - சோனம் கபூர் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரேம் ரதன் தான் பயோ மொழிமாற்றம் செய்யப்பட்டு மெய் மறந்தேன் பாராயோ என்ற தலைப்புடன் தமிழில் வெளியாகிறது. எனினும் தீபாவளி முடிந்து 2 தினங்கள் கழித்து இந்தப் படம் வெளியாவதால் இந்தப் படத்தை நாம் நேரடிப் போட்டியில் சேர்த்துக் கொள்ளவில்லை.


இந்தத் தீபாவளி திவாகருக்கா இல்லை வேதாளத்திற்கா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்...English summary
Ajith,s Vedalam and Kamal Haasan's Thoonga Vanam will be Released Tomorrow for Diwali Festival. Now Kamal Haasan Direct to Clash with Ajith Kumar in Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil