»   »  தீபாவளி தினத்தில்.. கமலுடன் மோதக் காத்திருக்கும் அஜீத்

தீபாவளி தினத்தில்.. கமலுடன் மோதக் காத்திருக்கும் அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருடாவருடம் தீபாவளி தினத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். வழக்கத்திற்கு மாறாக இந்த வருடத்தில் 2 படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

பண்டிகை நாட்களில் பெரிய பட்ஜெட் படங்களை திரையிடுவது என்றும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் பட அதிபர்கள் சங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.


இந்த அறிவிப்பின்படி இந்த தீபாவளிக்கு கமல்ஹாசன் நடிப்பில் தூங்காவனம் மற்றும் அஜீத் நடிப்பில் வேதாளம் ஆகிய படங்கள் வெளியாகின்றன.


தூங்காவனம்

தூங்காவனம்

தூங்காவனத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷாசரத், சம்பத் மற்றும் மதுஷாலினி போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.ராஜேஷ் எம். செல்வா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் படம் வெளியாகிறது.


திவாகர்

திவாகர்

தூங்காவனம் படத்தில் திவாகர் என்னும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். மர்மங்கள் நிறைந்த ஒரு திகில் திரைப்படமாக தூங்காவனம் தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது. ஸ்லீப்லெஸ் நைட் என்னும் பிரெஞ்சுப் படத்தின் தழுவலாக இருந்தாலும் தமிழுக்கு ஏற்ற மாதிரி படத்தை மாற்றியிருப்பதால் தூங்காவனத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


வேதாளம்

வேதாளம்

வேதாளத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், தம்பி ராமையா மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர். வருகிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் தீபாவளி விருந்தாக வெளியாகிறது.


டான் அஜீத்

டான் அஜீத்

படத்தில் டாக்ஸி டிரைவர் மற்றும் டான் என 2 விதமான தோற்றங்களில் அஜீத் நடித்திருக்கிறார். குடும்ப செண்டிமெண்ட் + அதிரடி என்ற விகிதத்தில் வேதாளம் உருவாகியிருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வீரம் படத்திற்குப் பின்னர் 2 வது முறையாக அஜீத்துடன் சிறுத்தை சிவா இணைந்திருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது.


இந்த தீபாவளி கமல், அஜீத் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது, அதே நேரம் வசூலில் யார் முன்னிலை பெறுவார்கள் என்ற
விவாதங்களும் ரசிகர்கள் மத்தியில் தற்போது சூடுபிடித்து வருகிறது.English summary
Diwali Battle 2015: This Diwali 2 big stars Ajith Kumar and Kamal Haasan clash head on with their films Vedalam and Thoongaavanam respectively.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil