»   »  இந்த தீபாவளிக்கு தூங்கா வனம் Vs வேதாளம்... ஆனா மோதுற தேதி?

இந்த தீபாவளிக்கு தூங்கா வனம் Vs வேதாளம்... ஆனா மோதுற தேதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த தீபாவளிக்கு கமல் ஹாஸனின் தூங்கா வனமும், அஜீத்தின் வேதாளம் படமும் மோதுவது உறுதியாகிவிட்டது.

சிவா இயக்கத்தில், அஜீத், ஸ்ருதி ஹாஸன், லட்சுமி மேனன் நடித்துள்ள வேதாளம் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. விரைவில் சென்சாருக்கும் அனுப்பப்பட்டுவிடும். சென்சார் முடிந்து வந்ததும்தான் இந்தப் படம் தீபாவளி அன்று வெளியாகுமா அல்லது முன்கூட்டியே வெளியாகுமா என்பது.


Diwali spl: Thoonga Vanam Vs Vedalam

அதேபோல கமல் ஹாஸனின் தூங்கா வனம் படமும் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இன்னும் சென்சார் சான்றிதழ் பெறப்படவில்லை.


கமலும் தன் படத்தை தீபாவளி தேதிக்கு சில தினங்கள் முன்பாகவே வெளியிடலாம் எனத் திட்டமிட்டுள்ளார்.


இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதும் சூழலை விநியோகஸ்தர்கள் விரும்பவில்லை. இரண்டு படங்களும் குறைந்தது இரு தினங்கள் வித்தியாசத்தில் வெளியானால், வசூல் பாதிக்காது என்று கருதுகின்றனர்.


இரண்டு படங்களுக்குமே 'விரைவில்' அல்லது 'தீபாவளி வெளியீடு' என்ற அறிவிப்புடன் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

English summary
Kamal's Thoonga Vanam and Ajith's Vedalam are scheduled to release on Diwali. But the actual release dates hasn't yet to finalise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil