»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

காதல் கொண்டேன் படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் சைக்கோத்தனமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்தனுஷ்.

தனுஷுக்கு இப்போது நேரம் சரியில்லை. இதனால் அவரது படங்களை எடுப்பதிலும், வெளியிடுவதிலும் பலசிக்கல்கள் வந்து கொண்டே உள்ளன.

கடைசியாக வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணனும் சுமாராகவே ஓடியதால் மறுபடியும் ஒரு சூப்பர்டூப்பர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ். இதனால் சுள்ளானை உடனே ரிலீஸ்செய்ய பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது தனுஷ் தரப்பு.

ஆனால், அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் பல இடைஞ்சல்களைசெய்து வருவதால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந் நிலையில் அவரது தந்தை கஸ்தூரிராஜா இயக்கும் ட்ரீம்ஸ் படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தனுஷ்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதில் அவருக்கு காதல்கொண்டேன் படத்தில் வருவது போல சைக்கோத்தனமான கேரக்டராம்.

தனுஷுக்கு சைக்கோத்தனமான கேரக்டர்கள் நன்றாக பொருந்துவதால் மீண்டும் அவரை சைக்கோவாக்க அப்பாகஸ்தூரி ராஜாவும், அண்ணன் செல்வராகவனும் ஒத்துக் கொண்டுள்ளார்களாம்.

மகனுடான மோதலால் ட்ரீம்ஸ் படத்தை நீண்ட நாள் கிடப்பில் போட்ட கஸ்தூரிராஜாவுக்கு புது சிக்கல். முதலில்ஹீரோயினாக தியாவை வைத்து சூட் செய்த காட்சிகளை எல்லாம் மறுபடியும் எடுக்க வேண்டியுள்ளதாம். காரணம்,பல மாதம் வீட்டில் சும்மா இருந்த தியா மேலும் ஊதிவிட்டது தான்.

இதனால் தியா தவிர, பாரு என்ற மும்பை பெண்ணையும் இன்னொரு கதாநாயகியாக சேர்த்திருக்கிறார்கஸ்தூரிராஜா. படத்தில் இனி ஹீரோயின் பாரு தானாம். தியாவின் கேரக்டர் படத்தில் கும்மாங்குத்து டான்ஸ் என்றஅளவுக்கு சுருக்கப்பட்டுவிட்டதாம்.

ட்ரீம்ஸ் படம் முடியும் வரை வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்ற கஸ்தூரிராஜாவின் கண்டிஷனுக்கு கட்டுப்பட்டுஇத்தனை நாட்களாகக் காத்திருந்த தியா, இப்போது பெரும் வருத்தத்தில் இருக்கிறார்.

பி.கு: படத்தில் நடிக்காமல் சும்மா இருந்த நேரத்தில் டிஸ்கொத்தே, பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் டான்ஸ்,பார்ட்டி என திரிந்தார் தியா. அப்போது ஒருவருடன் காதல் உருவாகி இப்போது அவருடனேயே சேர்ந்துவசிப்பதாய் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil