»   »  "வெங்கி"க்கு கண்ணு கலங்கிருச்சு.. நமக்கோ கண்ணு, காது, மூக்கெல்லாம் வேர்க்குதே பாஸ்!

"வெங்கி"க்கு கண்ணு கலங்கிருச்சு.. நமக்கோ கண்ணு, காது, மூக்கெல்லாம் வேர்க்குதே பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையை விடு.. சகாப்தம் பாத்தியா.. இதுதான் தேமுதிகவினரின் இப்போதைய ஒரே பேச்சாக இருக்கிறதாம். யாரைப் பார்த்தாலும் சட்டைப் பையை விட சகாப்தம் பத்தித்தான் கவலையாக இருக்கிறார்களாம். காரணம் ஜூனியர் கேப்டன் (இப்படித்தாங்க எல்லோரும் சொல்கிறார்கள்) நல்லபடியா தேறி வரணுமே என்ற அக்கறையில்.

எனக்குக் கொடுத்த ஆதரவை அப்படியே சண்முகப் பாண்டியனுக்கும் கொடுக்கனும் என்று விஜயகாந்த் அன்பாக கேட்டுக் கொண்டார். இதையடுத்து தேமுதிகவினர் இப்போது தியேட்டர் வாசல்களில் தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.. பகிரங்கமாக அன்புக் கட்டளை போட்ட விஜயகாந்த் தரப்பு.. மறைமுகமாக படம் பார்க்காத பார்ட்டிகளை லிஸ்ட் போட்டு கொண்டிருப்பதாக தகவல் பரவவே, தேமுதிகவினர் விழுந்தடித்து தியேட்டர்களைப் போய் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த முறை தலைவரைப் பார்க்க வரும்போது சகாப்தம் படம் பத்தி கேப்பாரு, அதனால போய்ப் பார்த்துட்டு வந்துருங்க, அப்புறம் பாக்காம வந்து முழிக்காதீங்க சிலர் எச்சரிக்கவே நிர்வாகிகளும், எம்.எல்.ஏக்களும் சகாப்தம் படத்துக்கு குடும்பம் குடும்பமாக போய் பார்த்து வருகிறார்களாம்.

படம் பற்றி விமர்சனங்கள் வில்லங்கத்தனமாக இருந்தாலும் கூட தேமுதிகவினர் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக பார்க்கிறார்களாம்.. !

அப்படிப் படம் பார்த்து விட்ட வந்த சில தேமுதிக எம்.எல்.ஏக்கள் விகனுக்கு பேட்டியும் கொடுத்துள்ளனர். அதைப் படிச்சுப் பாருங்க...!

தம்பி சொல்றதைக் கவனிக்கணும்...!

தம்பி சொல்றதைக் கவனிக்கணும்...!

மேட்டூர் எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், சகாப்தம் படத்துல தம்பி சொல்லியிருக்கும் மெசேஜை எல்லோரும் கவனிக்கணும். உள்ளூர்லயே எவ்வளவோ வேலைகள் இருக்குது. இங்கயே உழைச்சு நம்ம வீட்டுக்கும் நாட்டுக்கும் கெளரவமா வாழலாம். ஆனால், பலருக்கும் வெளிநாட்டு மோகம்தான். அதனால எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுது என்பதை தோலுரிச்சு காட்டியிருக்கு தம்பி.

ஒவ்வொரு பைட்டும்.. செம செம!

ஒவ்வொரு பைட்டும்.. செம செம!

அவர் போடுற ஒவ்வொரு ஃபைட்டும் செம ஹிட்டு. இது முதல் படம்தானான்னு நம்பவே முடியலை. ஒரு ஸீன்ல, ‘மன்னிப்பு.... எங்க பரம்பரைக்கே பிடிக்காத விஷயம்!'னு சொல்லுவாரு பாருங்க... அப்படியே எங்க தலைவரைப் பார்க்கிற மாதிரியே இருந்துச்சு.

என்னா ஹைட்டு என்னா வெயிட்டு

என்னா ஹைட்டு என்னா வெயிட்டு

எங்க கேப்டன் 30 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவை கட்டுப்பாட்டில் வெச்சிருந்தார். இனி தமிழ் சினிமா தலைமுறை எங்க சண்முகபாண்டியன் கட்டுக்குள் இருக்கும். ஏன்னா தமிழ் சினிமாவுல இவ்வளவு பெரிய ஹைட்டு வெயிட்டான ஹீரோ யாருமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால், தமிழ் சினிமாவுல 6 அடி 7அங்குலம் யாருமே கிடையாது. சத்யராஜ்கூட 6 அடி 5 அங்குலம்தான்.

அப்புறம் ஒரு முக்கியான விஷயம்...!

அப்புறம் ஒரு முக்கியான விஷயம்...!

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், க்ளைமாக்ஸ்ல கேப்டன் வருவது. அவர் வரும்போது தியேட்டரே அதிருது. அவர் வருஷத்துக்கு ஒரு படமாவது நடிச்சா நல்லா இருக்கும். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்காக இப்போதும் இருக்காங்க என்று கூறி நிறுத்தினார்.

சேலம் வடக்கு அழகாபுரம் மோகன்ராஜ்

சேலம் வடக்கு அழகாபுரம் மோகன்ராஜ்

சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அழகாபுரம் மோகன்ராஜ் சொல்லும்போது, முதல் படத்துலயே அவர் போட்ட ஃபைட்ல எங்க கேப்டனை ஞாபகப்படுத்திட்டார். கேப்டன் எப்படி லெக் ஃபைட் பண்ணுவாரோ அதே மாதிரி பண்ணியிருக்கிறார்.

அப்படியே நெஞ்சு வரைக்கும்!

அப்படியே நெஞ்சு வரைக்கும்!

கேப்டன், வில்லனோட நெஞ்சு வரைக்கும் காலை தூக்கி உதைப்பார். இவரோட ஹைட்டுக்கு வில்லனோட தலை வரைக்கும் தூக்கி அடிக்கிறது அதிரடியா இருக்குது.

காலைத் தூக்கும்போது!

காலைத் தூக்கும்போது!

அப்படியே, காலை தூக்கும்போது கேப்டன் மாதிரியே இருந்துச்சு. டான்ஸும் சும்மா பின்னி எடுத்திருக்கிறார். அவர் பேசுற ஒவ்வொரு டயலாக்குமே பிரமாதம். இன்னைக்கு மாஸ் ஹீரோன்னு சொல்ற விஜய், தனுஷ், ‘ஜெயம்' ரவின்னு எல்லோருக்குமே முதல் படம் வெற்றி. இவரும் அதேபாணியில் வந்திருக்காரு.

அப்படியே இப்படியும் நடிச்சுட்டா...

அப்படியே இப்படியும் நடிச்சுட்டா...

இதுமாதிரியான ஆக்‌ஷன் படங்களா மட்டும் இல்லாம ‘அம்மன் கோவில் கிழக்காலே', ‘நினைவே ஒரு சங்கீதம்', ‘சின்னக்கவுண்டர்' மாதிரியான ஆக்டிங்கை வெளிப்படுத்துற படமும் நிச்சயமா பண்ணுவார் என்று சொல்கிறார்.

பொளந்துட்டாருங்க

பொளந்துட்டாருங்க

பண்ருட்டி சிவக்கொழுந்து கூறியபோது கட்சிக்காரங்க எல்லோருக்குமே படத்தைப் பார்த்துட்டு அப்படி ஒரு சந்தோஷம். எங்க கேப்டனையே திரையில பார்த்த மாதிரி இருந்துச்சு. ஃபைட் சீன்ல பொளந்து கட்டியிருக்காரு. அவருக்கு முதல்படம்னு யாருகிட்ட சொன்னாலும் நம்பவே மாட்டாங்க. பண்ருட்டியில முதல் நாள் எல்லா ஷோவும் ஹவுஸ்ஃபுல்! என்று சந்தோஷம் காட்டினார்.

தவிர்க்க முடியாத தம்பி

தவிர்க்க முடியாத தம்பி

கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ சுபா சொல்வதைக் கேளுங்கள்.... பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சரியான அறிவுரை சொல்லும் படம். சொல்லப்போனால் இது படம் இல்லை... பாடம்! கேப்டன் தன்னோட மகன் படம் என்பதற்காக மட்டும் இதுல நடிக்கலை. இதுக்கு முன்னாடி விஜய்க்காக ‘செந்தூரபாண்டி'ல நடிச்சாரு. சூர்யாவுக்காக ‘பெரியண்ணா'வுல நடிச்சாரு. அவுங்க எல்லாமே இன்னைக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர்கள். எங்க சண்முகபாண்டியனும் அந்த இடத்தைத் தொட இன்னும் வெகுநாட்கள் இல்லை! என்றார்.

தாங்க முடியலைங்க...!

தாங்க முடியலைங்க...!

தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ பாஸ்கர் படம் பார்த்த சந்தோஷத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை. படம் பார்த்தபோது எங்க ஜூனியர் கேப்டனோட ஆக்‌ஷனைப் பார்த்து எனக்கு சந்தோஷம் தாங்க முடியலை. ஆக்‌ஷன், டான்ஸ், மெசேஜ்னு தலைவர் படம் எப்படி இருக்குமோ அப்படியே இருக்குது. கட்சிக்காரங்க எல்லோரையும் குடும்பத்தோட படம் பார்க்கச் சொல்லியிருக்கோம் என்றார்.

பக்கத்து வீட்டுப் பையன்

பக்கத்து வீட்டுப் பையன்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் தே.மு.தி.க-வின் கொள்கைபரப்புச் செயலாளருமான வி.சி. சந்திரகுமாரும் படம் பார்த்து விட்டார். அவர் சொன்னபோது, பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இயல்பான முகம் சண்முகபாண்டியனோடது. அதுதான் அவருக்கான பெரிய ப்ளஸ். மக்களை ரொம்பவும் ஈஸியா ஈர்த்துட்டாரு.

நம்ம பையன் மாதிரியே இருக்கானே!

நம்ம பையன் மாதிரியே இருக்கானே!

தியேட்டர்ல படம் பார்த்த பெண்கள் பலரும், நம்ம பையன் மாதிரியே இருக்கான்!னு பேசிகிட்டாங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி 20 வருஷம் இருந்தாங்க. அடுத்து ரஜினி, கமல். அதுக்கு அடுத்து பார்த்தீங்கன்னா கேப்டன், சத்யராஜ். இப்போ விஜய், அஜித், சூர்யா. அடுத்த தலைமுறை என்றால் அது சண்முகபாண்டியன்தான். போன தலைமுறை நடிகர்களின் படம் இந்த தலைமுறை ரசிகர்களுக்குப் பிடிக்காது இல்லையா? இப்போ இருக்கும் யங்ஸ்டர்ஸ்க்கு சண்முகபாண்டியன் பிடிக்கும் என்றார்.

கண்ணு கலங்கிய வெங்கடேசன்

கண்ணு கலங்கிய வெங்கடேசன்

திருக்கோவிலூர் எம்.எல்.ஏ வெங்கடேசன், பெட்ரோல் பங்க்ல ஒரு ஃபைட் ஸீன் வரும். எனக்கு கண் கலங்கிடுச்சு. தியேட்டர்ல விசில் சத்தம் அடங்குறதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு. சமூகவிரோதச் செயல்களைக் கண்டுபிடிச்சு தண்டிக்கிறதுதான் படத்தோட ஒன்லைன். சண்முகபாண்டியன் ஒரு ஆளாக மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கிறார். இதுநாள் வரை ஆக்‌ஷன் என்றால், கேப்டன்தான் நினைவுக்கு வருவார். இனி சண்முகபாண்டியன்தான் அந்த இடத்தைப் பிடிப்பார் என்றார்.

"வெங்கி"க்கு கண்ணு கலங்கிருச்சு.. நமக்கோ கண்ணு, காது, மூக்கெல்லாம் வேர்க்குது பாஸ்!

English summary
DMDK MLAs are enjoying Sagaptham movie and passing positive words on actor Shanmuga Pandian.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil