twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோக்களை விட சம்பளம் ரொம்ப கம்மிதான்: ஹீரோயின்கள் ஆதங்கம்

    By Mayura Akilan
    |

    மும்பை: பாலிவுட் பட உலகில் ஹீரோக்களின் சம்பளம் ரூ.30 கோடி, ரூ.40 கோடி என உயர்ந்து நிற்கிறது. ஹிருத்திக் ரோசன் சமீபத்தில் ஒப்பந்தமாகியுள்ள படத்திற்கு ரூ.50 கோடி சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் ஹீரோக்களுடன் ஒப்பிடும் போது தங்களின் சம்பளம் ரொம்ப குறைவுதான் என்று ஆதங்கப்படுகின்றனர் பாலிவுட் ஹீரோயின்கள்.

    இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக உள்ள கத்ரீனா கைப், கரீனா கபூர், வித்யா பாலன் ஆகியோர்தான் இப்படி குரல் எழுப்பியுள்ளனர்.

    கோடிகளில் கொட்டும் சம்பளம்

    கோடிகளில் கொட்டும் சம்பளம்

    பாலிவுட்டின் முன்னணி ராஜாக்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோர் ஒரு படத்துக்கு ரூ. 35 கோடி முதல் 40 கோடி வரை பெறுகிறார்கள். படத்தின் லாபத்திலும் இவர்களுக்குப் பங்கு உண்டாம்.

    தீபிகா படுகோனே டாப்

    தீபிகா படுகோனே டாப்

    அதே சமயம் பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே ரூ. 8 கோடி சம்பளம் பெறுகிறாராம். பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப் ஆகியோருக்கு ஒரு படத்துக்கு ரூ. 5 கோடிதான் பெறுகிறார்கள் என்கிறது புள்ளிவிபரம்.

    சம்பள வித்தியாசம் ஏன்?

    சம்பள வித்தியாசம் ஏன்?

    நடிகர், நடிகைகளுக்கு இடையிலான சம்பள வித்தியாசம் ‘பைத்தியக்காரத்தனம்' என்று பிரியங்கா குமுறுகிறார்.

    கத்ரீனா சாடல்

    கத்ரீனா சாடல்

    இரு தரப்புக்கும் இடையிலான இடைவெளி ‘பெரும் வித்தியாசம்' என்று பெருமுகிறார், கத்ரீனா. ‘‘நடிகர்களுக்கான சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு கூட எங்களுக்குக் கிடைப்பதில்லை'' என்று கனலாகிறார் கங்கனா.

    ஆதிக்க மனோபாவம்

    ஆதிக்க மனோபாவம்

    ‘‘பழைய ஆதிக்க மனோபாவத்தில் பிறந்தது இந்த விஷயம். நடிகைகளால் படம் ஓடுவதில்லை என்ற பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால் தற்போது உலகம் முழுக்க அந்தக் கருத்து படிப்படியாக மாறிவருகிறது என்கிறார் நடிகையும் தயாரிப்பாளருமான பூஜா பட்.

    ஒரே சம்பளம்தான்

    ஒரே சம்பளம்தான்

    என்னைப் பொறுத்தவரை நான் நடிகர்கள், நடிகைகள் இருவருக்கும் ஒரே மாதிரிதான் சம்பளம் கொடுக்கிறேன்'' என்கிறார், முன்னாள் நடிகையும், இந்நாள் தயாரிப்பாளருமான பூஜா பட்.

    ஹாலிவுட்டில் எப்படி

    ஹாலிவுட்டில் எப்படி

    இந்தியத் திரையுலகோடு ஒப்பிடும்போது, ஹாலிவுட்டில் நடிகர்கள்- நடிகைகளுக்கு சம்பள வித்தியாசம் பெருமளவில் இல்லை. அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட் பட உலகிற்கும் வந்துகொண்டிருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

    பெண்களை மையப்படுத்தி

    பெண்களை மையப்படுத்தி

    பெண்களை மையமாக வைத்து மேலும் நிறைய படங்கள் வரும்போது நிலைமை இன்னும் மேம்படும் என்கிறார்கள் அவர்கள். பெண்களைச் சார்ந்து எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்புக் கூடினால், எங்களுக்கும் நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பதில் ஒன்றும் பிரச்சினையில்லை'' என்கிறார், தயாரிப்பாளர் வாசு பக்னானி.

    கரீனாவின் சம்பளம்

    கரீனாவின் சம்பளம்

    ‘‘நான் கரீனாவுக்கு முன்பு லட்சங்களில் சம்பளம் கொடுத்தேன் என்றால், தற்போது கோடிகளில் சம்பளம் கொடுக்கிறேன் என்றும் வாசு பக்னானி கூறியுள்ளார்.

    நடிகருக்கான வரவேற்பு

    நடிகருக்கான வரவேற்பு

    ‘‘ஒரு நடிகருக்கான சம்பளத்தை அவருடைய மார்க்கெட் வேல்யூதான் தீர்மானிக்கிறதே தவிர, தயாரிப்பாளர் அல்ல. நாம் ஹாலிவுட்டை பின்பற்றினால் இந்த சம்பள பிரச்சினையைத் தீர்த்துவிடலாம்.

    வசூலைப் பொருத்து சம்பளம்

    வசூலைப் பொருத்து சம்பளம்

    அங்கே, முக்கிய பாத்திரங்களில் நடித்தது நடிகர், நடிகை யாராக இருந்தாலும், அப்படம் ஈட்டும் வசூலை கணக்கிட்டுத்தான் சம்பளம் அளிக்கப்படுகிறது'' என்கிறார் மற்றொரு தயாரிப்பாளரான விபுல் ஷா.

    ரஜினி - கமல்

    ரஜினி - கமல்

    தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா ஆகிய நடிகர்களின் சம்பளம் ரூ. 20 கோடியை தாண்டிவிட்டது. இவர்களுக்கு அடுத்து தனுஷ், சிம்பு, சிவகார்த்திக்கேயன், ஜீவா, ஜெயம்ரவி, ஆகியோரின் சம்பளம் ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை கொடுக்கப்படுகிறது.

    நயன்தாரா நம்பர் 1

    நயன்தாரா நம்பர் 1

    தமிழ் திரை உலகில் தற்போதைக்கு நயன்தாராதான் ரூ.2 கோடி முதல் 2.5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்ருதிஹாசன், சமந்தா, ஆகியோர் உள்ளனர். ஹன்சிகா, காஜல் அகர்வால் என அடுத்த கட்ட நாயகிகள் இன்னும் ஒருகோடியை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளனராம்.

    இந்தியைப் போல

    இந்தியைப் போல

    ஹாலிவுட் நாயகிகளுடன் ஒப்பிட்டு பாலிவுட் நாயகிகள் சம்பளம் கேட்பதைப் போல இந்தி நடிகைகளின் சம்பளத்துடன் ஒப்பிட்டு தமிழ் நாயகிகள் எப்போது போர்க்கொடி உயர்த்தப் போகின்றனரோ? என்று கதிகலங்கிப் போயுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

    English summary
    Male actors get big-budget movies that earn at the box office while women aren’t given the same roles. Heroines are often characterized as glamour dolls and therefore producers are known to give second-hand treatment to actresses in terms of money.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X