»   »  நாயுடுகளுக்கு மட்டும் தான் சபாஷ் சொல்வேனா?: கமல் விளக்கம்

நாயுடுகளுக்கு மட்டும் தான் சபாஷ் சொல்வேனா?: கமல் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாயுடுகளுக்கு மட்டும் தான் சபாஷ் சொல்வீர்களா என்று பலரும் கேட்கும் கேள்வி குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் விளக்கம் அளித்துள்ளார்.

கமல் ஹாஸன் தயாரித்து, இயக்கி, நடித்து வரும் படம் சபாஷ் நாயுடு. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படுகிறது.

இந்த படத்தின் தலைப்பை பார்த்து நாயுடுகளுக்கு மட்டும் தான் கமல் சபாஷ் சொல்வாரா என்று கேட்கிறார்களாம். இது குறித்து கமல் கூறுகையில்,

கமல்

கமல்

நீங்கள் நாயுடுகளுக்கு மட்டும் தான் சபாஷ் சொல்கிறீர்கள்... அப்படி என்றால் பிற சமூகத்தினருக்கு? என்கிறார்கள். அவர்களை சீரியஸாக எடுத்துக் கொள்வதா இல்லை கண்டுகொள்ளாமல் இருப்பதா என தெரியவில்லை.

கோபம்

கோபம்

நாயுடுகளுக்கு மட்டும் தான் சபாஷா என்று கேட்பவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் அது அவர்களை மேலும் கோபம் அடையச் செய்யும். ட்விட்டர் போன்று யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம் என்றாகிவிட்டது.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்

வசூல்ராஜா எம்பிபிஎஸ்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற படத்தில் நடித்தேன். நாங்கள் எல்லாம் பணம் வசூலிப்பவர்கள் என்கிறீர்கள், அதனால் நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம் என மெடிக்கல் கவுன்சில் தெரிவித்தது. இருப்பினும் நான் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன்.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

விஸ்வரூபம் படம் முஸ்லீம்களுக்கு எதிரானது என அனைவரும் கூறினார்கள். அந்த படத்தில் இருந்த ஒரே நல்லவர் இந்திய முஸ்லீம் நபர் தான். ஹே ராம் படத்தை பார்க்காமலேயே அதற்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார் என கமல் ஹாஸன் கூறினார்.

English summary
Actor Kamal Haasan said he doesn't know whether to ignore or take those people seriously who say, "Kamal is saying Sabaash to only Naidus... what about the other communities?.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil