லாக்டவுனில் மூக்கு குத்திக்கொண்ட பிரபல ஹீரோயின்..ஏங்க ரொம்பவா வலிக்குது? ஆசையாக கேட்கும் ரசிகைகள்!

By

கொச்சி: பிரபல ஹீரோயின் இந்த லாக்டவுனின் மூக்கு குத்தியிருக்கிறார். இதையடுத்து ரசிகைகள் பலர், வலிக்கலையா? என்று கேட்டுள்ளனர்.

Recommended Video

கற்பழிப்புகளுக்கு பெண்கள் தான் காரணம் | Parvathy Thiruvothu Tweet

பெண்களுக்கு மூக்குத்தி அழகு. இதற்காக பல பெண்கள் விரும்பி மூக்கு குத்திக்கொள்கிறார்கள்.

பலர் வலிக்கும் என்று பயந்தே மூக்கு குத்திக் கொள்வதில்லை. இந்நிலையில் பிரபல நடிகை பார்வதி, இந்த லாக்டவுனில் மூக்கு குத்தியிருக்கிறார்.

உத்தம வில்லன்

உத்தம வில்லன்

இவர், தமிழில், பூ படம் மூலம் அறிமுகமானவர். மலையாள நடிகை பார்வதி, தனது முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. தனுஷுடன் மரியான், கமலுடன் உத்தமவில்லன், ஆர்யா, ராணா நடித்த பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் பார்வதி.

இர்பான் கான் ஜோடி

இர்பான் கான் ஜோடி

இந்தியில், கரிப் கரிப் சிங்கிள் என்ற படத்தில் இர்பான் கான் ஜோடியாக நடித்திருந்தார். மலையாளத்தில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வரும் அவர், உயரே என்ற படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இதற்காகத் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியிருந்தார். இதில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இப்போது ராச்சியம்மா என்ற படத்தில் வித்தியாசமான தோற்றம் கொண்ட பெண்ணாக நடித்து வருகிறார்.

மூக்கு குத்தும் வீடியோ

மூக்கு குத்தும் வீடியோ

இவர், இந்த லாக்டவுனில், மூக்கு குத்தி இருக்கிறார். மூக்கு குத்தும் வீடியோவையும் போட்டோவையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பார்வதி. கூடவே மூக்குத்தியுடன் இருக்கும் தனது அம்மாவின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதற்கு கேப்ஷனாக, ஹைஜீனிக்கான இடம் என்பதால் இதை இந்த கொரோனா காலத்தில் குத்திக்கொண்டேன். ஆனால் மற்றவர்களுக்கு இதுபற்றி உறுதியளிக்க முடியாது.

தெரியாமல்

இடத்தின் சுகாதாரம் பற்றி நூறு சதவிகிதம் தெரியாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து பலர் அவரிடம் மூக்குக் குத்திய அனுபவத்தைக் கேட்டுள்ளனர். ஒரு ரசிகை, உண்மையிலேயே மூக்குக் குத்தும்போது வலி இருந்ததா? நானும் குத்தணும், வலிக்கு பயந்தே இதுவரை பண்ணலை? என்று கேட்டுள்ளார்.

குறைந்து விடுகிறது

குறைந்து விடுகிறது

அதற்கு, 'வலி இருந்தது. ஆனால், அது உடனடியாகக் குறைந்து விடுகிறது. ஒரு பருவை உடைத்தால் வரும் வலிதான். ஆனால் இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்று உறுதியாகச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார், நடிகை பார்வதி. ஒருவர், மூக்குத்தி ஒவ்வொரு பெண்ணுக்கும் அடுத்த லெவல் அழகை கொடுக்கும். உங்களுக்கு இன்னும் வேற லெவல் அழகைக் கொடுத்திருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்.

கீது மோகன்தாஸ்

கீது மோகன்தாஸ்

நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ், நீங்கள் ஏற்கனவே மூக்குக் குத்திருப்பதாக நினைத்தேன் என்று கூறியுள்ளார். அதற்கு, இல்லை. என் மூக்கு மூக்குத்தி கேட்பதாக என் தோழி சொன்னாள். அதனால் குத்திக் கொண்டேன் என்று பதிலளித்து இருக்கிறார் பார்வதி. பலர், மூக்குத்தி உங்களுக்கு அழகாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். சிலர் ஏன் இப்ப திடீர்னு மூக்குத்தி ஆசை என்றும் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X