Don't Miss!
- News
தமிழுக்கு மாபெரும் "கவுரவம்".. ஹஜ் யாத்திரையின் அரஃபா உரையை தமிழிலும் மொழிபெயர்க்க சவூதி அரசு முடிவு
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஏதாவது பார்த்து பண்ணுங்க...ஷங்கரிடம் நெட்டிசன்கள் என்ன கேட்டிருக்காங்க தெரியுமா ?
சென்னை : டைரக்டர் ஷங்கர் போட்ட ஒரே ஒரு ட்வீட்டிற்கு ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கும் ஆதரவுகள் பெருகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் டைரக்டர் ஷங்கர். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர். முதல்வன், எந்திரன், 2.0, நண்பன், அந்நியன், சிவாஜி, இந்தியன் என வரிசையாக பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர்.
ஐஸ்வர்யா
ராய்,
தீபிகா
படுகோன்,
பூஜா
ஹெக்டே..
களைகட்டும்
கான்ஸ்
திரைப்பட
விழா..
ரசிகர்கள்
மகிழ்ச்சி!

ஷங்கர் பட ரிலீஸ் எப்போ
இந்தியன் 2 பட விவகாரத்திற்கு பிறகு, அந்நியன் இந்தி ரீமேக் வேலையையும் நிறுத்தி வைத்துள்ளார். தற்போது ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கல் அல்லது கோடை விடுமுறையில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஎஃப் 2 ஐ பாராட்டிய ஷங்கர்
இந்நிலையில் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தை பார்த்துள்ளார் ஷங்கர். ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசான இந்த படத்தை ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது தான் ஒரு வழியாக பார்த்து விட்டு கமெண்ட் செய்துள்ளார். படத்தை பார்த்து விட்டு திரைக்கதை உள்ளிட்டவற்றை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். ஷங்கரின் பாராட்டுக்கும் பிரசாந்த் நீலும் நன்றி தெரிவித்துள்ளார். உங்களை போன்றவர்களிடம் இருந்து பாராட்டை பெறுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

ஷங்கருக்கு கோரிக்கை
இதில் ஹைலைட் என்னவென்றால், ஷங்கர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டது கேஜிஎஃப் 2 படத்தை தான். ஆனால் இதற்கு கமெண்ட் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள், சீக்கிரம் ஒரு பான் இந்தியா படம் எடுங்க. அதுவும் விஜய், அஜித்தை வைத்து எடுங்க என கேட்டுள்ளனர். அது மட்டுமல்ல விஜய்யை ஹீரோவாகவும் அஜித்தை வில்லனாகவும் வைத்து படம் எடுக்கும்படி கேட்டுள்ளனர்.

கோலிவுட்டை காப்பாத்துங்க
அதிலும் விட்டுக் கொடுக்காத அஜித் ரசிகர்கள், ஏன் அஜித் தான் வில்லன் ரோலில் நடிக்க வேண்டுமா. அஜித் ஹீரோவாகவும், விஜய் வில்லனாகவும் நடிக்க கூடாதா. விஜய்யை ஹீரோவாக மட்டுமே பார்த்து போரடிக்குது. அதனால் வித்தியாசமாக அவரை வில்லனாக்கி ஒரு படம் பண்ணுங்க. நீங்க தமிழுக்கு திரும்பி வந்தா தான் கோலிவுட்டை காப்பாத்த முடியும். ஏதோ பார்த்து பண்ணுங்க சார்.

அந்த மேஜிக்கை மீண்டும் பார்க்கனும்
சிவாஜி, அந்நியன், 2.0, முதல்வன் ஸ்டைலில் மற்றொரு மாஸான படத்தை கொடுங்க சார். தமிழ் சினிமாவை மீண்டும் உங்களால் தான் எழுச்சி அடைய வைக்க முடியும். இந்திய சினிமாவில் ஷங்கர், ராஜமெளலி, பிரசாந்த் நீல் தான் இனி எதிர்காலம் போல. எப்போ தமிழுக்கு திரும்பி வருவீங்க. தலைவர் ரஜினியுடன் சேர்ந்து சிவாஜி ஸ்டைலில் இன்னொரு படம் கொடுங்க. மீண்டும் அந்த மேஜிக்கை பார்க்க ஆசை என கேட்டுள்ளனர்.